அடிக்கல்நட்டு 3வருடங்களாகியும் முளைவிடாத வரவேற்புவளையி! காரைதீவுமக்கள் விசனம்: நிருவாகச்சிக்கலே தாமதத்திற்கு காரணமாம்!



வி.ரி.சகாதேவராஜா-
காரைதீவு தென்புறஎல்லையில் வரவேற்புவளையியை நிருமாணிப்பதற்காக மூன்றுவருடங்களுக்குமுன் அடிக்கல் நடப்பட்டும் இன்னும்; ஒருசாண்கூட நகராமல் அப்படியே கிடப்பது குறித்து காரைதீவு பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

அடிக்கல் நடப்பட்ட தடயத்தைக்கூட காணமுடியாதநிலையிலுள்ள அந்த இடத்தில் நேற்றுகூடிய பொதுமக்கள் இதற்கு தீர்வு காணப்படவேண்டும் என கருத்துரைத்தனர்.
தற்பொது அம்பாறை மாவட்ட மேலதிக அரசஅதிபரான வே.ஜெகதீசன் காரைதீவு பிரதேசசெயலாளராகவிருந்த 2018ஆம் ஆண்டு இதற்கான அடிக்கல்நடுவிழா கோலாகலமாக நடைபெற்றது.
காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறில் அதற்கான 85லட்சருபா நிதியை முன்னாள் அமைச்சர் மனோகணேசனிடமிருந்து பெற்று பிரதேசசெயலகத்திடம் கொடுத்திருந்தார்.அமுல்படுத்தும் பொறுப்பு வீதிஅபிவிருத்திஅதிகாரசபையின் நிருமாணத்திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
எனினும் நிருவாகநடவடிக்கைகள் காரணமாக தாமதமடைந்துவந்தது.சுமார் இருவருடகாலமாக இக்கட்டுமானப்பணி இழுபட்டுவந்தது.
இந்தநிலையில் 2020நவம்பர் மாதம் 16ஆம் திகதி இதன் கட்டுமானப்பணிளை மீள ஆரம்பிக்குமுகமாக பிரதேச செயலாளர் தவிசாளர் மற்றும் வீதிஅபிவிருத்திஅதிகாரசபை உயரதிகாரிகள் கூடி களத்திற்குச்சென்று உரிய இடத்தை நிருமாணத்திணைக்களத்திற்கு வழங்கியிருந்தனர்.
இருந்தபோதிலும் இன்றுவரை அப்பணி ஆரம்பமாகவில்லை. அடிக்கல்நடப்பட்ட இடம்கூட தெரியாதநிலையில் உள்ளது.
இது தொடர்பாக அங்கு மக்கள் கருத்துரைக்கையில்:
3வருடத்திற்குமுன்பு அடிக்கல்நடப்பட்ட போதிலும் இன்னும் வரவேற்புவளையியைக்காணாமல் கவலையடைகின்றோம். ஏனைய சில ஊர்களில் நினைத்தமாதிரி இத்தகைய வளையிகளைக்கட்டுகிறார்கள்.ஆனால் இங்குமட்டும் ஏகப்பட்ட தடைகள் நடைமுறைகள்.இருந்தும் 3வருடமாக இழுபட்டுவருகிறது என்றால் வெட்கமாகவிருக்கிறது. இதற்குப் பொறுப்பான பிரதேச செயலாளர் தவிசாளர் வீதித்துறையினர் பதிலளிக்கவேண்டும். என்றனர்.
தவிசாளர் கி.ஜெயசிறில் கருத்துரைக்கையில்:
காரைதீவு தென்புலஎல்லையில் வரவேற்புவளையி அமைக்கவேண்டும் என்ற பொதுமக்களின் நீண்டநாள் ஆசையை நிறைவேற்றுமுகமாக நான் எனது சொந்தப்பணத்தைச்செலவழித்து கொழும்புசென்று முன்னாள் அமைச்சர் மனோகணேசனிடம் 85லட்சருபா பணம் பெற்று பிரதேசசெயலகத்திடம் பணியை ஒப்படைத்தேன்.
அதனிடையே துறைசார்ந்த ஊர்ப்பிரதிநிதிகளை அழைத்து எவ்வாறு இந்த வரவேற்புவளையி வரவேண்டும் என்ற ஆலோசனையையும் பெற்றிருந்தேன். அதன்படி முறைப்படி உரியவர்களிடம் அனுமதியும் அங்கீகாரமும் பெறப்பட்டன.
இதன்கட்டுமானப்பணியை கட்டடத்திணைக்களத்திடம்ஒப்படைத்து வீதிஅபிவிருத்திஅதிகாரசபையின் நிருமாணப்பிரிவு முன்னெடுப்பதற்காக நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அறிந்தேன்.
ஆனால் இதுவரை ஒருஅடி கூட நகரவில்லை. 3வருடத்திற்கு என்னநடந்தது?.தமிழ்ப்பிரதேசம் என்பதாலா இந்த இழுத்தடிப்பு?பொதுமக்களைப்போன்றே நானும் கவலையடைகிறேன். தாமதத்திற்குகாரணம் என்னவென்றுகூடத்தெரியவில்லை என்றார்.
பிரதேசசெயலாளர் சிவ. ஜெகராஜனிடம் கேட்டபோது:
பொதுமக்களின் கவலை நியாயமானதுதான். வீதிஅபிவிருத்திஅதிகாரசபையிடமிருந்து நிருமாணத்திணைக்களத்திற்கு உரிய வரவேற்புவளையியின் திட்டஅங்கீகாரம் கிடைக்கப்பெற்றிருந்த போதிலும் வடிவமைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கப்பெறவில்லையெனத் தெரிகிறது. அதன்காரணமாகவே இத்தாமதம் நிலவுகிறது என்றார்.
உரியதரப்பினர் இவ்வரவேற்பு வளையியை இனியாவது அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா? என பொதுமக்கள் கோரிக்கைவிடுக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :