இடம்பெயர்ந்த 1,800 குடும்பங்களுக்கு அவசியமான உணவுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதிகளை வழங்குதல், மேலும் இடர் முகாமைத்துவ மையத்துடன் இணைந்து இடர் எதிர்வினைக்கான தேசிய திறனை வலுப்படுத்தும் பொருட்டு தேடுதல் மற்றும் மீட்பு உபகரணங்களை வழங்குதல் போன்ற திட்டங்களை உள்ளடக்கிய இம்முயற்சியின் மொத்த மதிப்பு 55 மில்லியன் ரூபா ஆகும்.
டிசம்பர் 6, 2025 அன்று மாபோலாவில் நடைபெற்ற தொடக்க விழாவில் பிரதேச சமூக தலைவர்களுடன் கத்தார் அரசின் இலங்கைக்கான தூதரகத்தின் பிரதித் தூதுவர் திரு. அலி பின் சலீம் அல் நுஐமி மற்றும் கத்தார் செரிட்டியின் இலங்கைக்கான பனிப்பாளர் திரு. முஹ்மூத் அபுகலீஃபா ஆகியோர் கலந்து கொண்டனர்.
கத்தார் செரிட்டியின் இலங்கைக்கான பனிப்பாளர் திரு. முஹ்மூத் அபுகலீஃபா நிகழ்வில் உரையாற்றிய போது:
“இந்த அவசரகால செயற்பாடுகள், உலகம் முழுவதும் பாதிக்கப்பட்ட குடும்பங்களை இனம், மதம் பாரபட்சமின்றி ஆதரிப்பது என்ற கத்தார் செரிட்டியின் பணி நோக்கத்தை பிரதிபலிக்கின்றன. மேலும் மனித நேய ஒருமைப்பாட்டுக்கான கத்தாரின் திடமான நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன.” என்று தெரிவித்தார்.
இலங்கையில் மனித நேய செயற்பாடுகளில் முன்னணியில் பங்காற்றி வருகின்ற கத்தார் செரிட்டி இதற்கு முன்பும் ஆயிரக்கணக்கான பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவசர உதவி, விவசாய ஆதரவு, மருத்துவ உதவி மற்றும் சமூக நிவாரணங்களை வழங்கியிருக்கிறது.

0 comments :
Post a Comment