ரெயினும் டிப்பர் வண்டியும் மோதியதில் டிப்பர் சாரதி படுகாயமடைந்துள்ளதாக வெலிகந்தை பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற ரெயின் வண்டியுடன் வெலிகந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடவத்தமடு பகுதியில் வைத்து டிப்பர் மோதியதில் இந்த விபத்து சம்பவம் சனிக்கிழமை (5) இடம்பெற்றுள்ளது.
கடவத்தமடு பகுதியிலிருந்து மணல் ஏற்றிக் கொண்டு பிரதான வீதிக்கு சென்ற டிப்பர் வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இவ் விபத்தில் டிப்பர் கடும் சேதமடைந்துள்ளதுடன், ரெயின் வண்டியும் தடம்புரண்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த டிப்பர் சாரதி வைத்தியசாலையில் சிகிச் பெற்று வருவதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment