பொக்சின் போட்டிக்குச் சென்று வெற்றி பெற்று வந்த இலங்கை வீர, வீராங்கணைகளை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு



ஏ.எஸ்.எம்.ஜாவித்-
இலங்கை பாகிஸ்தான் சவால் பொக்சின் போட்டிக்குச் சென்று வெற்றி பெற்று வந்த இலங்கை வீர, வீராங்கணைகளை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு ஒன்றினை அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் சங்கப் பேரவை தெமடகொடையில் உள்ள அதன் தலைமைக் காரியலயத்தில் ஏற்பாடு நேற்று வெள்ளிக்கிழமை செய்திருந்தது.

பேரவையின் தேசியத் தலைவர் சகீட் எம் ரிஸ்மி தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் 7 தங்கப்பதக்கங்களையும் 5 வெள்ளிப் பதக்கங்கங்களையும் பெற்றதுடன் விஷேட திறமைகளைக் காட்டிய 12 வீரர்களுக்கும் தலா பத்தாயிரம் ரூபா ஊக்குவிப்புத் தொகையும் நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்வில் விஷேட பேச்சாளராக மௌலவி பரிதௌஸ் மற்றும் சமுக சேவையாளர் ஹனீப் ஹாஜி உள்ளி;ட்ட பலர் கலந்து சிறப்பித்தனர். இதன்போது பொரளை பள்ளிவாசல் தலைவரால் வீரர்களுக்கு இருபத்தி ஐயாயிரம் ரூபா அன்பளிப்புத் தொகையும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :