இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 14வது பொதுப்பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக விழா மண்டபத்தில் இன்று (07) ஆரம்பமானது.
எதிர்வரும் வியாழக்கிழமை 10ஆம் திகதி வரை 4 நாட்கள் தொடர்ச்சியாக இடம்பெறவுள்ள இப்பட்டமளிப்பு விழாவில்; இன்றைய தினம் (07) பிரயோக விஞ்ஞானபீடம் மற்றும் பொறியியல் பீடத்தினைச் சேர்ந்த 475 மாணவர்கள் தங்களது பட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.
இன்றைய நிகழ்வின்போது பிரயோக விஞ்ஞானபீடத்தினைச் சேர்ந்த முகம்மட் அன்ஸிபா மற்றும் முஹம்மது புஹாரி சாபியா ஆகியோர் முறையே 2014/2015, 2015/2016 ஆம் கல்வி ஆண்டின் சிறந்த மாணவர்களுக்கான கலாநிதி எம்.எச்.எம்.அஷ்ரப் ஞாபகார்த்த விருதினையும் முகம்மட் புவாட் சாக்கிறா மற்றும் ஜி.டப்ளியு.எம். ஹசன்திக விஜேவர்தன ஆகியோர் 2013/2014, 2014/2015 கல்வி ஆண்டின் சிறந்த இரசாயனவியல்துறை மாணவர்களுக்கான பேராசிரியர் சுல்தான் பாவா விருதினையும் பெற்றுக்கொண்டதுடன்; பொறியியல் பீடத்திலிருந்து எம்.எம்.ரீ.லக்சாணி, 2013/2014 ஆம் கல்வி ஆண்டின் சிறந்த மாவருக்கான விருதினையும் அதே ஆண்டின் சிவில் பொறியியல் துறைக்கான விருதினையும் பெற்றுக்கொண்டார்.
அத்துடன் ஏ.ரீ.குமார மானவடுகே 2014/2015 ஆம் கல்வி ஆண்டின் சிறந்த மாவருக்கான விருதினையும் அதே ஆண்டின் சிவில் பொறியியல் துறைக்கான விருதினையும் பெற்றுக்கொண்டார்.
ஏ.ஜி.ஹிருணி உடரிக்க திவ்மினி 2013/2014 கல்வி ஆண்டிலும் பிரியன் மாவன் ஜெயவர்த்தன 2014/2015 கல்வி ஆண்டிலும் எலாக்டிகல் மற்றும் எலாக்டோனிக் பொறியியல் துறையின் சிறந்த மானர்களுக்கான விருதினையும் பெற்றுக்கொண்டனர்.
முதல்நாள் அமர்வான இன்றைய தினம் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா இணைய வழி மூலமாக பிரதான உரையை நிகழ்த்தினார்.
08 அமர்வுகளாக இடம்பெறவுள்ள இந்த பொது பட்டமளிப்பு விழாவில் மொத்தமாக 2,621 மாணவர்கள் பட்டங்களைப் பெறவுள்ளனர்.
நாளை (08) இடம்பெறவுள்ள 2ஆம் அமர்வில் கலைப் பீடத்தினைச்சேர்ந்த 219 மாணவர்களும், 3ஆம் அமர்வில் கலைப்பீடத்தினைச் சேர்ந்த 348 மாணவர்களும், 4ஆம் அமர்வில் இஸ்லாமியக் கற்கைகள் அறபு மொழி பீடத்தினைச் சேர்ந்த 329 மாணவர்களும், 5ஆம் அமர்வில் இஸ்லாமியக் கற்கைகள் அறபு மொழி பீடத்தினைச் சேர்ந்த 313 மாணவர்களும், 6ஆம் அமர்வில் முகாமைத்துவ, வர்த்தக பீடத்தினைச் சேரந்த 277 மாணவர்களும், 7ஆம் அமர்வில் முகாமைத்துவ வர்த்தக பீடத்தினைச் சேரந்த 348 மாணவர்களும், 8ஆம் அமர்வில் கலை, கலாச்சார பீட மற்றும் முகாமைத்துவ வர்த்தக பீடங்களின் 312 வெளிவாரி மாணவர்களும் தமது பட்டங்களைப் பெறவுள்ளனர்.
அத்துடன் இந்த பட்டமளிப்பு விழாவில் 04 பேர் முது தத்துவமானிப் பட்டங்களையும், 23 பேர் வியாபார நிருவாக முதுமானிப் பட்டங்களையும், 02 பேர் முகாமைத்துவத்தில் பட்டப்பின்படிப்பு டிப்ளோமாவினையும், இருவருக்கு கௌரவ கலாநிதிப் பட்டங்களும் வழங்கப்படவுள்ளன.
இதில் பேராசிரியர் எஸ். தில்லைநாதன், தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதலாவது பதிவாளர் ஜௌபர் சாதிக் ஆகியோர் கௌரவ கலாநிதிப்பட்டங்களைப் பெறவுள்ளனர்.
மேலும் இந்த பட்டமளிப்பு விழாவில் நாளைய தினம் (08) உயர் நீதிமன்ற நீதிபதி திலீப் நவாஸ், மூன்றாவது நாள் அமர்வில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சம்பத் அமரதுங்க, நான்காவது நாள் அமர்வில் ருஹுனு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் காமினி சேனாநாயக்க ஆகியோர் கலந்து கொண்டு பிரதான உரையாற்றவுள்ளனர்.
இந்த பொதுப் பட்டமளிப்பு விழாவானது எதிர்வரும் 10ஆம் திகதி நிறைவு பெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்
0 comments :
Post a Comment