கல்முனை தெற்கில் நடமாடும் தடுப்பூசி செலுத்தும் பணி..!



எம். என். எம். அப்ராஸ்-
ல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ. சுகுணனின் நெறிப்படுத்தலில் கல்முனைதெற்கு சுகாதார வைத்திய அதிகாரி ஏ. ஆர்.எம். அஸ்மி அவர்களின் வழிகாட்டலில், சுகாதார வைத்தியஅதிகாரி அலுவலக உத்தியோகத்தர்களினால் நடமாடும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் தொடரச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் தடுப்பூசியினை நிலையங்களுக்கு சென்று பெற முடியாதவர்களுக்காக கல்முனை தெற்குசுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள கல்முனைக்குடி மற்றும் மருதமுனை பிரதேசத்தில் உள்ளவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று தடுப்பூசி செலுத்தும் நடமாடும் சேவை நேற்று  (04) இடம்பெற்றது.
இதன் போது சுமார் 40 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

குறித்த தடுப்பூசி செலுத்தும் பணி யானது பொது சுகாதார பரிசோதகர் நியாஸ் எம். அப்பாஸ் குடும்ப நல உத்தியோகத்தர்களான எம். ஈ நபிஸா, ஆர் . சுஹைனா உட்பட தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பணியாளர்கள் ஆகியோரால்முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதேவேளை கல்முனை தெற்கு சுகாதார பிரிவில் கடந்த நாட்களில் பொதுமக்கள் தடுப்பூசியினை பெற்றுக்கொள்ள மிகவும் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தும் நிலையங்களுக்கு வருகை தந்து தமக்கான தடுப்பூசியைபெற்றுக் கொண்டதை அவதானிக்க முடிந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :