இன்று உணவுப்பொருள் விற்பனை நிலையங்களை திறக்க அனுமதி



வி.ரி.சகாதேவராஜா-
பொதுமக்கள், இன்று(6) திங்கட்கிழமை உணவு பொருட்கள் கொள்வனவுக்காக, மாத்தளை நகரிலுள்ள உணவு பொருட்கள் விற்பனை நிலையங்கள் மளிகை கடைகள் மாத்திரம் காலை 06:00 மணி முதல் பகல் 2:00 மணி வரை திறந்து விற்பனை செய்ய விற்பனை நிலையங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது
இவ்வனுமதியை மாத்தளை மாநகர முதல்வர் சந்தனம் பிரகாஷினால் பொதுமக்களுக்கான விசேட அறிவித்தல் மூலம் விடுத்துள்ளார்.

அவரது அறிவித்தலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

தொடர் பயண தடை காரணமாக பொது மக்களின் அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொள்வனவு செய்து கொள்வதற்கு ஏதுவாக மாத்தளை மாவட்ட கொவிட் தடுப்பு குழுவின் விசேட தீர்மானமனத்துக்கு அமைய மாத்தளை மாநகர மொத்த விற்பனை நிலையங்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 06:00மணி முதல் பகல் 2:00 மணி வரை திறந்துவைக்கப்பட்டன..

அதேவேளை , உணவு பொருட்கள் விற்பனை நிலையங்கள் மளிகை கடைகள் மாத்திரம் இன்று(6) திங்கள் காலை 06:00 மணி முதல் பகல் 2:00 மணி வரை திறந்து விற்பனை செய்ய விற்பனை நிலையங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது .

ஏனைய விற்பனை நிலையங்கள் (பேக்கரி உணவகங்கள் ஓட்டல்கள் உட்பட ஏனைய விற்பனை நிலையங்களுக்கு ) திறப்பதற்கான அனுமதி வழங்கப்படவில்லை.

எனவே , அத்தியாவசிய தேவையுடையவர்கள் மாத்திரம் சுகாதார வழிமுறையோடு செயல்படுமாறு கேட்டுக்கொள்வதோடு அநாவசியமானவர்கள் நகருக்கு வரும்பட்சத்தில் பாதுகாப்பு தரப்பினால் கைது செய்யப்படுவார்கள் என்பதால் வருவதை தவிர்க்குமாறும் நகரில் வாகன இடையூரை தவிர்க்குமுகமாக வாகனங்களை நிறுத்துமிடமாக பஸ் நிலையங்கள் கெசினோ பாதை ரத்தொட்ட பாதை பேர்னாட் அலுவிகார மைதான சுற்று வட்ட பாதைகளை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :