திருகோணமலை மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளராக கடமையாற்றி அபிவிருத்தி ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வை அமைச்சின் பணிப்பாளர் நாயகமாக பதவி உயர்வுடனான இடமாற்றம் பெற்றுச்சென்ற கே.பரமேஸ்வரன் அமைச்சின் செயலாளரிடம் இருந்து நியமனத்தை பெற்றுக்கொண்டதுடன் தனது கடமைகளை புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.
1994ஆம் ஆண்டு இலங்கை திட்டமிடல் சேவை திறந்த போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த இவர் அரச சேவையில் 27 வருடங்கள் சேவையாற்றியுள்ளார்.
திருகோணமலை மாவட்ட செயலகத்தில் கடமையாற்றிய இவருக்கு மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்தன பாண்டிக்கோரளாவினால் பரிசில், நினைவுச் சின்னம் மற்றும் பொன்னாடை போர்த்தி கௌவிக்கப் பட்டமை குறிப்பிடத் தக்கது
0 comments :
Post a Comment