இது பற்றி உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத், கௌரவ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது..
கிராமங்களுக்கு நேரடியாக விஜயம் செய்து அம்மக்களின் குறைபாடுகளை அறியும் ஜனாதிபதியின் நல்லதொரு வரலாற்று ரீதியிலான வழி காட்டலை நாட்டு மக்கள் வியந்து பார்க்கின்றனர். ஜனாதிபதியின் இச்செயல், மக்களின் ஓட்டுக்களை பெற்ற பின் அடுத்த தேர்தல் வரை தமக்கு வாக்களித்த ஏழை மக்களை திரும்பியும் பார்க்காத மக்கள் பிரதிநிதிகளுக்கு நல்லதொரு பாடமாக உள்ளது.
அந்த வகையில் சம்மாந்துறை தொகுதியில் உள்ள சவளக்கடை, 5, முதல் 12வரையான கொலணிகள், மஜீத் புரம் கல்முனைத்தொகுதியின் நற்பிட்டிமுனை, பாண்டிருப்பு, பொத்துவில் தொகுதியின் ஒலுவில், பாலமுனை, திருக்கோவில் போன்ற கிராமங்கள் அபிவிருத்தியில் மிகவும் பின் தங்கியுள்ளதால் ஜனாதிபதி அவர்கள் இது போன்ற கிராமங்களுக்கு நேரடி விஜயம் செய்ய வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சகோதர கட்சி என்ற வகையில் அன்பாய் வேண்டுகோல் விடுக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.

0 comments :
Post a Comment