அக்கறைப்பற்று பிரதேச மக்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனையும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்துப் பொதிகள் வழங்கிவைப்பும்.
கொவிட்-19 தொற்றின் அபாய வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள அக்கறைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பி.சி.ஆர்பரிசோதனைகள் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள்பணிப்பாளர் டொக்டர ஜி.சுகுனணின் அறிவுறுத்தலுக்கு அமைய தொற்று நோய் தடுப்புபிரிவின் பொறுப்பு வைத்தியர் நாகூர் ஆரிப் தலைமையிலானமருத்துவக் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது.
அந்த வகையில் அக்கறைப்பற்று பொதுச் சந்தையில் வியாபாரநடவடிக்கைகளில் ஈடுபடும் அக்கறைப்பற்று பிரதேசசபைக்குட்பட்டவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனை2020.12.02ஆந் திகதி பிரதேசபை வளாகத்தில் நடைபெற்றது.
குறித்த பி.சி.ஆர் பரிசோதனையில் தங்களை ஈடுபடுத்தியவர்களுக்கான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்புச்செய்வதற்கான ஆயுர்வேத மருந்துப் பானமும்வழங்கிவைக்கப்பட்டது.

0 comments :
Post a Comment