சிறையில் நடந்த கலவரத்துக்கும் தனக்கும் சம்பந்தம் இருப்பதாக கூறும் குற்றச்சாட்டை மறுப்பதாக மஹர சிறைச்சாலை வைத்தியர் இந்திரஜித் பனவன்ன தெரிவித்துள்ளார்.இது சம்பந்தமாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவுக்கு முறைப்பாடு ஒன்றை எழுத்து மூலம் 3 ம் திகதி கையளிக்க உள்ளார்.
2019 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 31 ம் திகதி ததான் மஹர சிறைச்சாலைக்கு சேவைக்கு இணைக்கப்பட்டதாகவும், 2020 ம் ஆண்டுக்குரிய மருந்து வகைகள் தனக்கும் முன்னதாக. அங்கு சேவையில் இருந்த வைத்தியரே கட்டளையிட்டு பெற்றுள்ளதாகவும் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவித்துள்ளார்.
மேலும் இவ்வறிக்கையில் "சாதாரணமாக மருந்து வழங்கும் பிரிவில், 3மாதத்திற்கு ஒரு முறை சிறைச்சாலைக்கு மருந்துகளை கட்டளையிட்டு பெறுவதுண்டு.
இச்சிறையில் மனநலம் பாதிக்கப்பட்ட 31 பேருக்கு, போதைபொருள் பாவனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் 8 வகையான மருந்துகளை சிகிச்சையின்போது வழங்குவதுண்டு.இவை வெளிநோயாளர் பிரிவிலேயே வைக்கப்பட்டிருந்தது என அறிக்கையிடப்பட்டுள்ளது.
வெலிகடை சிறையிலிருந்து மஹரசிறைக்கு மாற்றப்பட்டவர்ளுக்கு PCR பரிசோதனை செய்யப்பட்டது.இது சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட சுற்றறிக்கைக்கு அமைவாகவே செய்யப்பட்டது.
இதேவேளை மனநோயாளர்க்கு வழங்கும் மருந்துகள் எவ்வகையிலும் கலவரத்தை தூண்டுவதாக செயற்பட மாட்டாது எனவும், மாறாக அவை அவ்வாறான மனநிலையை குறைப்பதாகவும் வைத்தியர்கள் சங்கத்தின் விசேட வைத்தியர்கள் குழு தெரிவித்துள்ளது.
மஹரசிறைச்சாலையில் ஏற்பட்ட குழப்பநிலைக்கு மனநோயாளர்க்கு வழங்கப்படும் மருந்துகளே காரணம் என ஊடகங்களில் வெளியான செய்திகளை தாம் மறுப்பதாகவும் இச்சங்கம் கூறி உள்ளார்.
இவ்வாறான ஊடகங்களின் தவறான செய்திகளால், மனநல சிகிச்சை சம்பந்தமாக மக்கள் மனதில் தவறான மனோநிலையையே உருவாக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :
Post a Comment