அனர்த்த முகாமைத்துவ நடடிக்கை விரைவில் முன்னெடுப்பு- பிரதீப் கொடிபீலி



J.f.காமிலா பேகம்-
புரவி சூறாவளியானது மன்னார் பகுதியில் நிலைக்கொண்டுள்ளதுடன், அதன் தாக்கம் பல பகுதிகளில் பலத்த காற்று வீசும் நிலையை ஏற்பட்டுள்ளதியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
அத்துடன், நேற்று இரவு நாட்டுக்குள் ஊடுருவிய இந்த சூறாவளி காரணமாக பாரிய ஆபத்துக்கள் எதனையும் ஏற்படுத்தவில்லை என மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவுகளினால் அறிவிக்கபட்டுள்ளதாக, அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த சூறாவளியின் தாக்கம் தொடர்ந்தும் பல பகுதிகளில் தாக்கத்தை ஏற்பட்டுத்தியுள்ளதாகவும், இதன்படி பல இடங்களில் கன மழை மற்றும் கடும் காற்று வீசுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், குறித்த பகுதிகளில் அனர்த் முகாமைத்துவ நடவடிக்கைகள் விரைவாக முன்னெடுக்கபட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

மேலும், முல்லைத்தீவு, வவுனியா, யாழ்ப்பாணம் உள்ளிட்ட மாவட்டங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இன்றைய தினத்திலும் நாட்டின் பல இடங்களில் பலத்த மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கபட்டுள்ள நிலையில், இது குறித்து மக்கள் மிகவும் அவதானமாக செயற்ப்படவேண்டுமெனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :