சீரற்ற காலநிலை இடையே மூவரைக் காணமல் போயுள்ளனர்!

J.f.காமிலா பேகம்-

சீரற்ற காலநிலை மற்றும் புயல் நிலைமைக்கு இடையே யாழ்ப்பாணத்தில் 3 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி வேலணை பகுதியை சேர்ந்த 2 பேர் மற்றும் சங்கானை பகுதியை சேர்ந்த ஒருவர் என மொத்தமாக 3 பேர் காணாமல் போயுள்ளதாகவும், 3 நபர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாதாகவும், யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவி பணிப்பாளர் சூரியராஜா தெரிவித்துள்ளார்.

தொடர் மழை மற்றும் காற்று காரணமாக யாழ் மாவட்டத்தில் 15 வீடுகள் முழு அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், 141 வீடுகள் பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், இதுவரை 4 இடைத்தங்கல் முகாம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் சூரியராஜா குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மாழை மற்றும் காற்று காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போதுவரை 756 குடும்பங்களை சேர்ந்த 2941 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :