கல்முனை மாநகரசபையில் த.தே.கூட்டமைப்பு உறுப்பினர்கள் எழுவரில் இருவர் எதிர்ப்பு :ஜவர் ஆதரவு.



பிரதேசசெயலகம் ஆலயத்திற்கு மேயர் எதிர்ப்பாக இருந்தமைக்காக எதிர்த்தோம்;.
த.தே.கூட்டமைப்பு உறுப்பினர்களான ராஜன் சிவலிங்கம் கருத்து
காரைதீவு நிருபர் சகா-

ல்முனை மாநகரசபையின் மூன்றாவது வரவுசெலவுத்திட்டத்திற்கு அங்குள்ள தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஏழு(7) உறுப்பினர்களுள் ஜந்து உறுப்பினர்கள் ஆதரவாகவும் இருஉறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்துள்ளனர்.
கல்முனைமாநகரசபையின் வரவுசெலவுத்திட்டம் (2) சபையில் மேயர் எ.எம்.ரக்கிப்பினால் சமர்ப்பிக்கப்பட்டபோது ஆதரவாக 24வாக்குகளும் எதிராக 15வாக்குகளும் அளிக்கப்பட்டன. இருவர் சமுகமளிக்கவில்லை. மொத்தமாக 41உறுப்பினர்கள் சபையிலுள்ளனர்.
வரவுசெலவுத்திட்டம் வெற்றியளித்துள்ள நிலையில் த.தே.கூட்டமைப்பு இரு பிரிவாக பிரிந்து வாக்குகளித்துள்ளமை பலரது கவனத்தையும் ஈர்த்தமை குறிப்பிடத்தக்கது.

எதிர்த்து வாக்களித்த த.தே.கூ.உறுப்பினர்களான சந்திரசேகரம் ராஜன் வி.சிவலிங்கம் ஆகியோர் கருத்துரைக்கையில்:

கல்முனை தமிழ்மக்களின் இதயதாரகையான பாரம்பரிய கல்முனை வடக்கு பிரதேசசெயலக தரமுயர்த்தலுக்கான உண்ணாவிரதம் இடம்பெற்றவேளையில் அதற்கெதிராக இடம்பெற்ற போராட்டத்தில் மேயர் கலந்துகொண்டு எமக்கு எதிராக செயற்பட்டமை மேலும் அதே வடக்கு பிரதேசசெயலகத்தினுள் அமைத்த ஆலயத்திற்க எதிராக நீதிமன்றில் வழக்கு தொடுத்து எதிர்ப்புதெரிவித்தமை போன்ற காரணங்களுக்காகவே நாம் அவர்கொண்டுவந்த வரவுசெலவுத்திட்டத்திற்க எதிர்த்து வாக்களித்தோம் என்றனர்.

கூடவே தமிழர் விடுதலைக்கூட்டணியின் உறுப்பினர்களான எஸ்.செல்வராசா கே.சந்திரன் வி.விஜயலெட்சுமி ஆகியோரும் அ.இ.மு.காங்கிரசின் உறுப்பினர் டி.எம்.மனாப் மற்றும் சாய்ந்தமரு தோடம்பழ சுயேச்சை உறுப்பினர்களும் தே.காங்கிரஸ் உறுப்பினரும் எதிர்த்து வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :