J.f.காமிலா பேகம்-
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தாமே முற்றிலும் தகுதியானவர் என்று அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சிரேஸ்ட உறுப்பினருமான ஜோன் அமரதுங்க தெரிவிக்கின்றார்.
ஊடகமொன்றுக்கு இன்று வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்காக போட்டியிடுகின்ற உறுப்பினர்களில்
முதலாவது பெயரில் தாமே இருப்பதாகவும், ஆனால் அந்தப் பட்டியலில் பலரும் தேசியப்பட்டியலைப் பெற தகுதியற்றவர்களாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய தேசியக்கட்சி சார்பாக தாம் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், அதனால் தாம் தேர்தலில் தோல்வியடையவும் இல்லை என்பதால், தாமே அந்த வெற்றிடத்திற்குத் தகுதியானவர் என்றும் ஜோன் அமரதுங்க கூறுகின்றார்.
அந்த பதவி தன்னை தேடிவரும் என்றும், அப்பதவிக்காக தாம் கூக்குரலிடுவதோ அல்லது சண்டைசெய்வதோ இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 comments :
Post a Comment