கொவிட்-19 தொற்றினால் மரணிக்கும் ஜனாஸாக்களை தகனம் செய்வதற்கு எதிராக, நீதிமன்றில் போராடும் -பைஸர் முஸ்தபா


 ஐ. ஏ. காதிர் கான் -

னது சமூகத்திற்காக நீதிமன்றத்தில் தானே முன் வந்து மனுத்தாக்கல் செய்து, தானே நீதிமன்றில் ஆஜர் ஆகியுள்ளார் முன்னாள் அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா.

கொரோனாத் தொற்று வைரஸினால் மரணிப்பவர்களின் ஐனாஸாக்களை (தகனம்) எரிப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணை, (30) திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு எடுக்கப்பட்டு, அன்றைய தினம் மாலை 5 மணி வரை வாதப்பிரதிவாதங்கள் தொடர்ந்து இடம் பெற்றது.

மீண்டும் இன்று (01) செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணி முதல் குறித்த வழக்கு விசாரணை ஆரம்பமாகியுள்ளது.

சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா அடங்கலாக, சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணிகளான எம்.ஏ. சுமந்திரன்,
நிஸார் காரியப்பர் உள்ளிட்ட குழுவினர், மிகவும் ஆணித்தரமாகவும் விஞ்ஞான ரீதியாகவும் அத்துடன், மிகத் தெளிவாகவும் விரிவாகவும் நீதிபதியின் கேள்விகளுக்கு பதில் அளித்து விவாதித்து வருகின்றனர்.

இம்மனுக்களை ஆட்சேபித்து, கொவிட்-19 வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் அனைவரினதும் உடல்கள் எரிக்கப்பட்ட வேண்டும் எனக் கோரி, அரச தரப்புப் பிரதிநிதியான ஐனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஐயரத்ன ஆஐராகியிருக்கிறார். 

சுகாதார அமைச்சர் சார்பில் பிரதிநிதி சொலிசிட்டர் ஜெனரல் நெரில்புள்ளே ஆஜராகி உள்ளார்.

குறித்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணைகள் நேற்று (30) ஒத்திவைக்கப்பட்டு, மீண்டும் இன்று (01) செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணி முதல் விவாதம் இடம் பெற்று வருவதாக, முன்னாள் அமைச்சர் ஐனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :