இன்று நாடு முழுவதும் பஸ் சேவைகள் வழமைக்கு திரும்பின!

வைப்பகப்படம்:இம்போட்மிரர்
ன்று (30) முதல் நாடு முழுவதும் பஸ் சேவைகள் வழமை போன்று இடம்பெறும் என்று இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது.
இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க இது தொடர்பாக தெரிவிக்கையில், பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டதை தொடர்ந்து போதியளவு பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடவில்லை என்ற விடயத்தை கவனத்திற் கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :