J.f.காமிலா பேகம்-
2015ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் காலப் பகுதியில், தேர்தல் பிரசாரத்திற்காக திவி நெகும நிதியத்திலிருந்து 294 லட்சம் ரூபா நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியதாக அப்போதைய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் உள்ளிட்ட நால்வர் மீது தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது.
கொழும்பு – மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்ந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், இன்றைய தினம் தீர்ப்பு வழங்கப்படவுள்ளதாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.
இந்த வழக்கின் பிரதிவாதிகளாக முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் நிஹால் ஜயதிலக்க, திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க மற்றும் அதே திணைக்களத்தின் முன்னாள் பிரதி பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment