தனிமைப்படுத்தல் வீடுகளிலுள்ள பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்ப வேண்டாம்!

கொ
விட்-19 தொற்றாளர் அல்லது தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தமது வீடுகளில் இருக்கும் பட்சத்தில், அந்த வீட்டிலுள்ள பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்ப வேண்டாம் என சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவு அனைத்து பெற்றோர்களிடமும் கேட்டுக்கொண்டுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்தியர் சுதத் சமரவீர இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

கொவிட் தொற்று அதிகளவில் பரவி வருகின்ற பின்னணியில், பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையினால், அந்த சவாலை வெற்றிக்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மற்றும் மேல் மாகாணத்தை தவிர்ந்த ஏனைய அனைத்து பகுதிகளிலும் உள்ள பாடசாலைகள் கடந்த 23ம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.

இவ்வாறான நிலையில், கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து, சில பாடசாலைகள் இடைநடுவில் மூடப்பட்டன.

இதேவேளை ஹட்டனில் உயர்தரத்தில் கல்விபயிலும் மாணவனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் பல மாணவர்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :