வவுனியா கோவில்குளம் உள்ளக வீதி தாரிடப்பட்டு செப்பனிடும் பணிகள் ஆரம்பம். !! (படங்கள்)

வுனியா நகரசபைக்குட்பட்ட கோவில்குளம் பகுதியில் தெகிலுப்பை குளம் பிரதான வீதியின் உள்ளக வீதியான ராஜா மில் வீதியானது தாரிடப்பட்டு செப்பனிடும் பணிகள் இன்று ஆரமபமாகின .

வவுனியா கோவில் குளம் , கோவில்புதுக்குளம் பத்தாம் வட்டாரமான பகுதிக்கு, புளொட் அமைப்பின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் வவுனியா மாவட்ட அமைப்பாளரும் , வவுனியா நகரசபை உறுப்பினருமான சந்திரகுலசிங்கம் மோகன் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பாதீட்டு நிதியிலிருந்து குறித்த வீதி கிறவல் இடப்பட்டு தாரிட்டு செப்பனிடும் பனியின் முதற்கட்ட பணிகள் இன்று ஆரம்பிக்கபட்டன .

தனது வட்டார கிராமமான கோவில் குளம் , கோவில்புதுக்குளம் பகுதியில் 95 வீதமான நகரசபை வீதிகள் செப்பனிடும் பணி நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும், அனைத்து வீதிகளும் செப்பனிடப்படும் என நகரசபை உறுப்பினர் சந்திரகுலசிங்கம் மோகன் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :