சிறைக்கைதிகள் மோதல் இதுவரை 06 சடலங்கள் மீட்பு -43 பேர் வைத்தியசாலையில்

ஹர சிறைச்சாலயைில் நேற்று மாலை கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட அமைதியின்மை கைகலப்பு காரணமாக  06 பேரின் சடலங்கள் இதுவரை கிடைக்கப்பெற்றுள்ளதாக ராகமை வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அதேபோல், குறித்த சம்பவத்தில் காயமடைந்த 43 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மஹர சிறைச்சாலையின் கைதிகள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து மேலும் சில கைதிகள் சிறைச்சாலையில் இருந்து தப்பிச் செல்ல முயற்சித்த சம்பவத்தை காரணமாக கொண்டு நேற்று (29) மதியம் இந்த அமைதியின்மை ஏற்பட்டது.

அதன்படி, சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனை கைதிகளை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகள் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக சிறைச்சாலை அதிகாரிகள் குறைந்த பட்ச அதிகாரத்தை பயன்படுத்தியுள்ள நிலையில் இதன்போது சில துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர்.

எவ்வாறாயினும், குறித்த அமைதியின்மையை கட்டுப்படுத்துவதற்காக பின்னர் பொலிஸ் விசேட அதிரடப்படையினர் அழைக்கப்பட்டிருந்தனர்.

சிறைச்சாலை வளாகத்தில் பாதுகாப்பினை பலப்படுத்திய நிலையில், களனி மற்றும் ராகமை பொலிஸ் நிலையங்களில் இருந்து 5 பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.derana

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :