நிகழ்நிலை (ONLINE)தரம் 5 பரீட்சையில் கிழக்குமாகாணம் சாதனை. கிழக்கில் சம்மாந்துறை வலயம் நடாத்திய நிகழ்நிலைப்பரீட்சை.


காரைதீவு நிருபர் சகா-

நாடாளாவியரீதியில் தரம்5புலமைப்பரிசில் பரீட்சைக்குத்தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான நிகழ்நிலைப் பரீட்சையை (ONLINE EXAM)சம்மாந்துறை வலயக்கல்விப்பணிமனை முதன்முதலாக நேற்று-19- நடாத்தியது.

இது தொடர்பாக சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் தெரிவிக்கையில்:

இலங்கையிலுள்ள 9மாகாணங்களுக்கும் 3தினங்களுக்கு முன்பாகவே இணையத்தளம் வாயிலாக இப்பரீட்சை தொடர்பாக அறிவித்தல் செய்யப்பட்டது.

அதன்படி இப்பரீட்சை ஞாயிறன்று காலை 10.30மணி தொடக்கம் நிகழ்நிலையில் (ONLINE)12மணிவரை நடாத்தப்பட்டது. இதற்கு மாகாணரீதியாக சமகாலத்தில் 3234மாணவர்கள் தோற்றியிருந்தனர்.

பரீட்சை முடிவுற்றமறுகணம் டிஜிட்டல் தொழினுட்டபத்தில் கணப்பொழுதில் திருத்தி பரீட்சை முடிவுகள் அதே இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. அதன் பகுப்பாய்வும் வெளியிடப்பட்டது.

அதன்படி மொத்தமாகத் தோற்றிய 3234மாணவர்களுள் கிழக்குமாகாணத்திலிருந்து 1834மாணவர்கள் அதிகூடிய எண்ணிக்கையில் தோற்றியிருந்தனர்.

தோற்றிய மாணவர்களுள் 200புள்ளிகளை 43மாணவர்கள் பெற்றிருந்தனர். இந்த 43மாணவர்களுள் 32பேர் கிழக்குமாகாணத்தைச்சேர்ந்தவர்கள். அடுத்தபடியாக மேல்மாகாணத்தில் 4பேரும் மத்திய மற்றும் வயம்பா மாகாணத்தில் தலா 3பேரும் சபரகமுவ மாகாணத்தில் ஒருவருமாக மொத்தம் 43மாணவர்கள் பெற்றுச்சாதனைபடைத்தனர்.

பரீட்சைக்குத்தோற்றிய 3234மாணவர்களுள் 70புள்ளிகளுக்கு மேல் அதாவது சித்திபெற்ற மாணவர்கள்3071பேராவர். 1738பேர் கிழக்கைச்சேர்ந்தவர்களாவர். சம்மாந்துறை வலயத்தில் 899மாணவர்கள் தோற்றினர் அவர்களுள்13பேர் 200 புள்ளிகளையும் 847பேர் 70புள்ளிகளுக்கு மேல் பெற்றும் சாதனை படைத்துள்ளனர்.

இப்பரீட்சை செயற்பாட்டினை கிழக்கு மாகாணக்கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம். மன்சூர் பாராட்டியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -