அகில இலங்கை இந்து குருமார் சபா, மலையக இந்து குருமார் ஒன்றியத்தின் செயலாளருமான சிவஸ்ரீ சுரேஸ் சர்மா தெரிவித்தார்
திருகோணமலை திருகோணேஸ்வரம் ஆலயத்தில் கலசம் உடைந்து கீழே விழுந்து விட்டது அதனால் இந்து மக்கள் மஞ்சள் நீரில் நீராட வேண்டும் என்று சொல்லி வலைத்தளங்களில் போலியான செய்தியொன்று பரப்பப்பட்டு வருகிறது. இதனால் இன்று அதிகாலை முதல் இந்துக்கள் அச்சத்திற்கு உள்ளாகி பல்வேறு செயப்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் அந்த செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை நான் திருகோணேச்சர ஆலயத்தின் பிரதம குருவையும் பொலிஸாரையும் தொடர்ப்பு கொண்டு கேட்டேன் அத்தோடு அதனுடன் தொடர்பான வீடியோக்களும் எமக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதனால் இது குறித்து இந்துக்கள் அச்சமோ பீதியோ அடைய தேவையில்லை என அகில இலங்கை இந்து மா சபாவின் தலைவரும் இந்து குருமார் ஒன்றியத்தின் செயலாளருமான சுரேஸ் சர்;மா தெரிவித்தார்.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் போலி செய்தியினையடுத்து இன்று (28) ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மஞ்சள் நீரில் குழிப்பதோ அல்லது மஞ்சள் நீரினை வீட்டுக்கு தெளிபப்தோ தவறு அல்ல ஆனால் அதில் மிகவும் அப்பட்டமான போலித்தனமான பிரசாரங்களை மேற்கொண்டு இந்து மக்களின் உள்ளங்களை புன்படுத்துவது பீதியடைய செய்வது மிகவும் தவறாகும்.
எனவே இவ்வாறான பிரசாரங்களை செய்யும் நபர்களுக்கு எதிராக பொலிஸார் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அதே நேரம் இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் 19 பரவுவதற்கு அரசாங்கம் என்ற ரீதியில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அதற்கு நாம் பூரண ஒத்துழைப்பினை வழங்கி அத்துடன் இந்த நோய் பிடியிலிருந்து விடுபட இறைவனை பிராத்திக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதன் போது தற்போது திருகோணமலை ஆலயத்தில் பெற்றுக்கொண்ட வீடியோ காட்சிகளை ஊடகங்களுக்கு வெளியிட்டார்.
இதே நேரம் கலசம் என்பது கருகாலி மரத்தில் மிகவும் சக்தி வாய்ந்த ஒன்று அது இலகுவாக உடையக்கூடியதல்ல அது விமானமோ அல்லது ராட்சித பறவை ஒன்றோ மோதினாலே தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் உடைந்து விழக்கூடிய வாய்ப்பு இல்லை என சிற்பிகள் தெரிவிக்கின்றனர்.