தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களை, நிரப்பும் பொருட்டு அதிபர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இவர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு இன்று கொழும்பில் (25) இடம்பெறுகிறது.
இவர்களுக்காக அண்மையில் நடத்தப்பட்ட நேர்முகப் பரீட்சையில் தெரிவான 282 பேருக்கு நியமனங்கள் வழங்கப்படுகிறது.
கல்வி அமைச்சர் டளஸ் அழகப் பெரும தலை
மையில் இன்று அலரி மாளிகையில் இடம்பெறும் வைபவத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடிதங்களைக் கையளிக்கவுள்ளார்.
இலங்கை கல்வி நிருவாக சேவையின் முதலாம், இரண்டாம், மூன்றாம் தரங்களைச் சேர்ந்தோரும், இலங்கை அதிபர் சேவை தரம் ஒன்றைச் சேர்ந்தோருக்குமே அதிபர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.
இவர்களுக்கு கடந்த ஆட்சிக் காலத்தில் நியமனங்கள் வழங்க முயற்சி எடுக்கப்பட்ட போதிலும் அரசியல் தலையீடுகளால் இம்முயற்சிகள் தடைப்பட்டன. தற்போது அரசியல் தலையீடுகள் எதுவும் இன்றிய நிலையில் சுயாதீனமாக நியமனங்கள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -