பொது மன்னிப்புக் காலத்தில் 4,299 பாதுகாப்புப் படையினர் மீளவும் வருகை


ஐ. ஏ. காதிர் கான்-

முப்படைகளையும் சேர்ந்த சுமார் 4,299 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மீளவும் அந்தந்தப் படைப் பிரிவுகளுக்கு திரும்பி வந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. சேவையில் இருந்து சட்டவிரோதமாகப் படையிலிருந்து சென்ற முப்படை வீரர்கள், சட்டபூர்வமாக சேவையிலிருந்து விலகிச் செல்வதற்காக அல்லது சேவையில் மீள இணைந்து கொள்வதற்கான ஒரு வார கால பொது மன்னிப்புக் காலம் அறிவிக்கப்பட்ட நிலையிலேயே, இவர்கள் இவ்வாறு அந்ததந்த படைகளுக்குத் திரும்பி வந்துள்ளனர்.

2020.02.05 ஆம் திகதி முதல் 7 நாட்களை பொதுமன்னிப்புக் காலமாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கான ஊடக அறிக்கை பெப்ரவரி 4 ஆம் திகதியன்று, பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டது.

இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமையவே, இந்த ஒரு வார கால பொது மன்னிப்புக் காலம் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -