அய்மன் கலை மன்றத்தால் நடாத்தப்பட்ட இலவசக்கல்விக் கருத்தரங்கு

றக்காமக் கல்விக் கோட்டத்தில் இம்முறை க.பொ.த(சா/த) பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்களின் நலன் கருதி இறக்காமக் கல்விக் கோட்டத்தில் இரண்டாம் தவணைப் பரீட்சையில் விஞ்ஞானப் பாடத்தில் குறைந்த புள்ளிகள் பெற்ற சுமார் 100 மாணவர்களுக்கான பாட மேம்பாட்டுச் செயலமர்வு ஒன்று இறக்காமம் அஸ்றப் மத்திய கல்லூரியில் இன்று இடம்பெற்றது,
இன்நிகழ்வானது அய்மன் கலைமன்றப் மன்றப் பணிப்பாளர் தேசாபிமானி எஸ்.எம்.சன்சீர் தலமையில் இன்று நடைபெற்றது. இச் செயலமர்வானது அகில இலங்கை HRF நிறுவன அனுசரணையுடன், இறக்காமம் அய்மன் கலை, கலாச்சார மன்றத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டு இருந்தது .

இச் செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில் இறக்காம உதவிப் பிரதேச செயலாளர் நஹிஜா முஸப்பிர் , இறக்காமம் அஸ்றப் மத்திய கல்லூரியில், அதிபர் ஏ.எச்.ஜெசீம் சேர் மற்றும் அய்மன் கலை கலாச்சார மன்ற சிரேஸ்ட ஆலோசகர் சட்டத்தரணி ஹாரிஸ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வில் விஞ்ஞானப் பாட வளவாளராக ஏ.எல்.றிஸ்வான் ஆசிரியர் கலந்து கொன்டமை குறிப்பிடத்தக்கது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -