லிபிய நாட்டின் சமாதான தூதுவர் நூரி பராஜ் நூரி பௌனாஸ் இலங்கை வருகை

அஷ்ரப் ஏ சமத்-
லிபிய நாட்டின் சமாதான தூதுவர் நூரி பராஜ் நூரி பௌனாஸ் அண்மையில் இரண்டு வாரம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். அவர் இதுவரை 130 நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டு 131வது நாடாக இலங்கை வந்திருந்தார். அவர் இலங்கை வாழும் ஊடக நண்பர்களை சந்தித்து கலந்துரையாடினார். அதில் அவர் தெரவித்த கருத்துக்கள் பின்வருமாறு -

சமாதாதானத் தூதுவர் நூரி பராஜ் லிபியாவின் பெங்காஸி நகரில் பிறந்து. கணனி துறையில் கற்றுள்ளார். அவர் 19 வயது இருக்கும்போதே சமதான தூதை உலகிற்கு கொண்டு செல்லும் பணியை ஆரம்பித்தாகச் சொல்கின்றார். அவர் லிபியாவை பிறந்தாலும் உலக மக்களில் ஒருவனுமாவேன். அந்தடிப்படையில் இப்பணியை முன்னெடுத்து வருகின்றேன்.
அதே நேரம் லிபியாவின் அமைதி , சமாதானத்திற்கு தலைதேங்கும் நாடு அதனால் சமாதானத்தினை ஏனைய நாடுகளுக்கும் உலகிற்கும் கொண்டு செல்ல வேண்டுமென விரும்பியதாக கூறினார்.
லிபியாவின் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சின் பிரதிநிதியாகவும், லிபியாவின் சர்வதேச இளைஞர் முகாமைப் பிரதிநிதித்துவப்படுத்தியாகவும் சிறுவயதில் உலக நாடுகளுக்கு இளைஞர் மாநாடுகள் மற்றும் தலைமைத்துவ பயிற்சியில் ஈடுபட்டதால் நான் உலக நாடுகளுக்கெல்லாம் சென்று நான் ஒரு சமாதாணத்தூதுவராக உலகில் வரவேண்டும் என்ற் எண்னப்பாடு என்னுள் எழுந்தது. அன்றில் இருந்து தற்பொழுது 45வயதிற்குள் இப் பணியில் தன்னை ; ஈடுபடுத்தி வருகின்றதாக கூறினார்.
அவர் தனிப்பட்ட ஆர்வம் காரணமாக சொந்த நிதியில் தான் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றார் அவர் . 1997 இல் ஆரம்பித்த இப்பணியின் நிமித்தம் இற்றைவரையும் 130 நாடுகளுக்கு பயணித்துள்ளார். அவர் விஜயம் செய்திருக்கும் 131 வது நாடே இலங்கையாகும்.
சுமாதான தூதைக் கொண்டு செல்லும் இப்பணியில் ஈடுபட்டுள்ள நான் பல்வேறுபட்ட நாடுகள் அங்கு வாழும் இளைஞர்கள் மற்றும் நண்பர்களும் சில நாடுகளிலுள்ள லிபிய தூதரகங்களில் உள்ள நண்பர்களும் உதவி ஒத்துழைப்புக்களை நல்குகின்றனர். அத்தோடு எனது விசா போக்குரவத்து வசதிகளை அந்தந்த நாடுகளிலுள்ள லிபிய தூதரகங்கள் ஊடாகவே லிபிய வெளிவிவகார அமைச்சு தனக்கு செய்து தருகின்றது.
;: இப்பணியின் நிமித்தம் உலகிலுள்ள எல்லா நாடுகளுக்கும் அவர் சமாதான தூதை கொண்டு செல்வதையே அவரது இலக்காகக் கொண்டிருப்பதாகவும் இத்திட்டத்தின் கீழ் அவர் ஒரு நாட்டுக்கு விஜயம் செய்தால் அந்நாட்டின் பலவேறு பிரதேசங்களுக்கும் நேரில் சென்று பிரதேச மக்களுடன் சுயமாக அறிமுகமாகி அலவலாவுவதாகவும் மற்றும் மதத் தலைவர்களுடனும் கலந்துரையாடி வழிபாட்டு தலங்களுக்கும் நேரில் செல்ன்றுள்ளவதாகவும் கூறினார். இவர் . இப்பணியில் இடைத்தரகர்கள் இல்லாமால் அவராகவே மக்களிடம் செல்வதாகவும் இதனூடாக சமாதானத்தின் சிறப்பையும், முக்கியத்துவத்தையும, அவசியத்துவத்தையும் அவர்களுக்கு எடுத்துக் கூறுகின்றார்.
இவ்வாறு பிரதேச மட்ட சந்திப்புக்களை நடாத்திய பின்னர் அந்நாட்டின் தலைநகருக்கு திரும்பி கொள்கை வகுப்பாளர்களையும், அரசியல் தலைவர்களையும் சந்;தித்து சமாதானத்தின் தூதை எடுத்துக் கூறுகின்றார். மனிதர்கள் என்ற அடிப்படையில் சகலரும் சமாதானமாகவும் நல்லிணக்கத்துடனும் சகவாழ்வுடனும் வாழ வேண்டியவர்கள். ஓவ்வொருவரும் தங்கள் தனித்துவத்தைப் பேணி பெரும்பான்மை சமூகங்களோடு ஒற்றுiமையாக வாழ முடியும். நிறமோ, இனமோ, மதமோ பிரதேச, நாட்டு எல்லைகளோ சமாதானம், நல்லிணக்கத்தை சீர்குலைக்க முடியாது. இதுவே அவரது சமாதான தூதின் அடிப்படையாகும்.
உலகில் 131 நாடுகளுக்கு இற்றைவரையும் விஜயம் செய்துள்ளேன். எனது 21 வருட சமாதானத் தூது பயணத்தில் ஒவ்வொரு நாட்டினதும் தேவைகளையும். நிலைமைகளையும் அறிந்துள்ளேன். ஒரு நாட்டில் பெறும் அனுபவங்களை மற்றொரு நாட்டினருக்கு கொண்டு செல்கின்றேன். அவர்களுடன் அவற்றைப் பகிர்ந்து கொள்கின்றேன்.
அதேநேரம் முரண்பாடுகள் மற்றும் மோதல்கள் நிலவும் நாடுகளுக்கும்; பிரதேசங்களுக்கும் செல்லக்கூடிய வாய்ப்பு கிடைக்கும் போது அவர்களுக்கும் சமாதானத்தினதும் சகவாழ்வினதும் முக்கியத்தை எடுத்துக் கூறுகின்றேன். அந்தடிப்படையில் எத்திரியாவுக்கும் எத்தியோப்பியாவுக்கும் இடையில் சுமார் 20 வருடங்கள் யுத்தம் இடம்பெற்று வந்தன. ஒரு பாதையும் மூடி வைக்கபட்டிருந்தது. இரு நாடுகளுக்கும் இடையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக பல்வேறு தரப்புக்களும் முயற்சிகளை மேற்கொண்டன. அவற்றில் நானும் ஒரவனாவேன்.. அந்தடிப்படையில் இப்போது அந்த இருநாடுகளும் சமாதான உடன்படிக்கையில் கைச்சார்த்திட்டுள்ளதோடு குறித்த பாதையும் திறக்கப்பட்டுள்ளது.
அவர் பிரயாணித்த நாடுகளில் இலங்கையில் அவர் செலவளித்த 2 வாரங்கள் மிகவும பயண்மிக்கதாகச் சொல்கின்றார் இலங்கை ஒரு பல்லிண மதங்கள் வாழும் ஓர் அழகான நாடாகும். அவரவர் மத நல்லிணங்கள், கலை கலாச்சாரங்களை எவ்வித தடங்களுமி;ண்றி செய்தற்கு மக்கள் வாழப்பழகிக் கொண்டுள்ளனர்.
இங்கு வித்தியாமானதும் முன்மாதிரியானதுமான அனுபவங்களைப் பெற்றுள்ளேன். இது ஒரு சிறிய நாடு என்றாலும் இங்கு நான்கு மதங்களைப் பின்பற்றும் மூன்று இனங்களைச் சேர்ந்த மக்கள் உள்ளனர். இவர்கள் ஒருவருக்கு ஒருவர் ஒற்றுமையாகவும் சகவாழ்வுடனும் வாழ்கின்றனர். இங்கு ஒரு குடியிருப்பு இடத்தை எடுத்து நோக்கினால் ஒரு வீடு பௌத்தருடையது என்றால் அதற்கு அருகிலுள்ள வீடு முஸ்லிமுடையதாகவோ. இந்து உடையதாகவோ அல்லது கத்தோலிக்கருடையாதாகவோ இருக்கின்றது. பல்லின மக்கள் வாழும் இந்நாட்டில் ஒவ்வொரு சமூகத்தினரும் அருகருகே நல்லிணக்கத்துடனும் சகவாழ்வுடனும் புரிந்துணர்வுடனும் வாழ்கின்றனர்.
இவ்வாறு வழிபாட்டு தலங்களையும் இவ்வாறு காணக்கூடியதாக உள்ளது. ஒரு பௌத்த வழிபாட்டு தளத்திற்கு அருகில் முஸ்லிம் பள்ளிவாசல் அல்லது இந்து கோவில் அல்லது கத்தோலிக்க தேவாலயம் அமைந்திருக்கின்றது. இவ்வாறு வழிபாட்டு தலங்களும் அருகருகே இருப்பதும் அபூர்வமானது. அந்த வகையில் இங்கு இன, மத பல்வகைமை மிகச் சிறப்பாகக் காணப்படுகின்றது.
அதனால் இங்கு பெற்றுக் கொண்டுள்ள அனுபவங்களையும் முன்மாதிரிகளையும் உலகின் ஏனைய நாடுகளுக்கும் குறிப்பாக மியான்மார் நாட்டுக்கு கொண்டு செல்ல எதிர்பாரக்கின்றேன். இலங்கைக்கான விஜயத்தை நிறைவு செய்து கொண்டு மாலைதீவுக்கும் இந்தியாவுக்கும்; சென்ற பின்னர் மியான்மர் நாட்டுக்கே பயணமாக மேற்கொள்ளவுள்ளதாகச் கூறினார்.
இலங்கை ஒரு தீவு நாடாக இருந்த போதிலும் இங்கு மிகவும் பண்பான மனித நேயம் மிக்க மக்கள் வாழுகின்றனர். அவர் இங்கு வருகை தந்தது முதல் இரண்டொரு வாரங்கள் நாட்டின் பல்வெறு பிரதேசங்களுக்கும் நேரில் சென்று மக்களுடன் அறிமுகமாகியதாகவும் அதனூhக இந்நாட்டு மக்கள் நல்ல மனிதர்கள். பண்பாளர்கள். உபசரிப்பில் உயர்ந்தவர்கள் என்பதை அறிந்து கொண்டேன். இந்நாட்டு மக்களின் சகவாழ்வும் நல்லிணக்கமும் அந்நியொன்ய வாழ்க்கை அமைப்பும் உலக சமாதான சகவாழ்வுக்கு நல்ல முன்மாதிரியாகும். இந்த முன்மாதிரி ஏனைய பிரதேசங்களுக்கும் நாடுகளுக்கும் கொண்டு செல்லப்பட வேண்டும். சமாதானம், சகவாழ்வு தொடர்பில் இங்கு நிறையப் படிப்பினைகளைப் பெறலாம். இருந்த பொதிலும் இங்குள்ள சமாதான சகவாழ்வு வாழ்வொழுங்கு குறித்து உலகின் ஏனைய பிரதேசங்களைச் சேர்;ந்தவர்கள் நிறைய அறியாதுள்ளனர்.

அதனால் இந்த சமாதான சகவாழ்வு வாழ்வொழுங்கின் அனுபவங்கள் குறித்து உலகின் ஏனைய பிரதேசங்களுக்கும் கொண்டு செல்ல எதிர்பார்த்துள்ளேன். அதேநேரம் இந்த சமாதான சகவாழ்வு நிலைமை இந்நாட்டில் மேலும் வலுப்பெறவும் நீடித்து நிலைக்கவும் வேண்டும். எனது இலங்கை விஜயத்தின்போது அரசியல் நெருக்கடி நிலவுகின்றது. இளைஞர் மற்றும் முஸ்லிம் தமிழ் தலைவர்களை சந்திக்க இருந்தும் அரசியல் நெறுக்கடிகள் முடிந்த பாடகாத் தெரியவில்லை எனது நிகழ்ச்சி நிரலின்படி நான் அடுத்த நாட்டுக்கு பயணிக்க வேண்டியுள்ளளது எனவும் லிபியா நாட்டின் சமாதானத் தூதுவர் நூறி பஜாஜ் கூறுகின்றார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -