இன்று யுகதாரினி செசிலியாவின் 'கரையைத்தேடு' கவிதைநூல் வெளியீட்டுவிழா வீரமுனையில்!


காரைதீவு நிருபர் சகா-
வீரமுனை பெண் எழுத்தாளர் யுகதாரினி செசிலியா சோமசுந்தரத்தின் 'கரையைத்தேடு' எனும் கன்னிக் கவிதைநூல் வெளியீட்டுவிழா இன்று(9) ஞாயிற்றுக்கிழமை காலை 9மணியளவில் வீரமுனை இ.கி.மி. பாடசாலையில் நடைபெறவுள்ளது.
வீரமுனை ஜங்கரன் கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் அதன் உபதலைவர் அ.சுதர்சன் தலைமையில் நடைபெறவுள்ள இவ்விழாவில் பிரதம அதிதிகளாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜ.எம்.மன்சூர் அம்பாறை மேலதிக மாவட்ட செயலாளர் க.விமலநாதன் சம்மாந்துறை பிரதேசசபைத்தவிசாளர் எ.எம்.எம்.நௌசாட் ஆகியோர் கலந்துசிறப்பிக்கவுள்ளனர்.
விசேட அதிதிகளாக நீதியமைச்சின் உதவிச்செயலாளர் எ.மன்சூர் சம்மாந்துறை பிரதேசசெயலாளர் எஸ்.எல்எம்.ஹனிபா உதவிப்பிரதேசசெயலாளர் எம்.எம்.ஹாஸிக் சிறப்பு அதிதிகளாக பேராசிரியர் றமீஸ்அப்துல்லா உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா மாவட்ட கலாசாரஉத்தியோகத்தர் ரி.எம்.றிம்சான் மாவட்ட இந்துகலாசார உத்தியோகத்தர் என்.பிரதாப் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

நூல் வெளியீட்டுரையை என்.பிரதாப்பும் நயவுரையை பேராசிரியர் றமீஸ்அப்துல்லாவும் ஏற்புரையை நூலாசிரியை யுகதாரினி செசிலியாவும் நிகழ்த்தவுள்ளனர்.
வீரமுனையைச்சேர்ந்த பெண் எழுத்தாளர் யுகதாரினி செசிலியா சோமசுந்தரத்தின் அச்சுருப்பெறும் முதல்நூல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -