தற்காலிக ஓய்வெடுக்கும் ஐந்தாம் தர மாணவர்கள்.


அபூ நமா-
ஒரு மனிதன் கல்வி கற்பதற்கு வயதெல்லையே கிடையாது அவரவர் விரும்பிய வயதில் தன்னுடைய அறிவை வளர்த்துக் கொள்ளவும், கல்வியினை எப்போதும் கற்றுக் கொள்ளவும் முடியும். ஆனால் பாடசாலைக் கல்வியென்பது அவ்வாறில்லை அது ஒரு குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட வயதில் கற்றுக் கொள்ள வேண்டிய கல்வியாகும்.

அந்தவகையில் நேற்று 5ம் திகதி முடிவடைந்த 2018 ம் ஆண்டிக்கான தரம் 5 மாணவர்களின் புலமைப் பரிசில் பரீட்சையின் பின் சற்று கடிணமான படிப்பிலிருந்து மாணவர்கள் ஓய்வெடுப்பதை காணமுடிகிறது.

தங்களுடைய வெளியூர் பயணங்கள் மற்றும் குடும்ப உறவுகளின் வீடுகளுக்கு செல்லுதல், நண்பர்களோடு விளையாட்டில் ஈடுபடல் போன்ற அன்றாட செயற்பாடுகளில் அவர்கள் மிகவும் ஆர்வமாகவுள்ளதை காணக் கூடியதாகவுள்ளது.
எது எவ்வாறு இருந்தாலும் தரம் ஐந்து மாணவர்களின் மனநிலைக்கு அப்பாலும் தங்களின் பெற்றோர்கள் பிள்ளைகள் கண்டிப்பாக பரீட்சையில் சித்தியடைய வேண்டும் அவ்வாறு அதில் தவரும் பட்சத்தில் கடுமையான தன்டனைகளை அந்தப் பிஞ்சு உள்ளங்களுக்கு கொடுப்பதை காணக் கூடியதாகவுள்ளது.
எனவே பிள்ளைகளின் எதிர்காலத்தை தீர்மானிப்பது இந்த ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை இல்லை என்பதை ஒவ்வொரு பெற்றோர்களும் நன்கு புரிந்து கொண்டு தொடர்ந்தும் மாணவ சமூகம் அவர்களுடைய தொடர்ச்சியான கல்வியினைத் தொடர ஒவ்வொருவரும் அவர்களுக்கான சந்தர்ப்பங்களை வழங்க வேண்டும் என்பது அவர்களின் எதிர்காலத்திற்கு உகந்ததாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -