அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான நேர்முகத் தேர்வு இன்றுடன் நிறைவு

ஹஸ்பர் ஏ ஹலீம்-

பிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான நேர்முகத் தேர்வு இன்றுடன் நிறைவு:கிண்ணியாவில் 504 வேலையில்லா பட்டதாரிகள் பதிவு

தேசிய கொள்கைகள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் அண்மையில் கோரப்பட்ட இரண்டாம் கட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களை இணைக்கும் விதத்தில் வேலையில்லா பட்டதாரிகளை பதிவு செய்து நேர்முகத் தேர்வுகள் நடைபெற்று வருவதையிட்டு கிண்ணியா பிரதேச செயலகத்தில் இன்று (24) செவ்வாய்க் கிழமை இறுதி நேர் முகப் பரீட்சைக்கான தினம் என்றும் இன்றுடன் பட்டதாரிகளின் நேர் முகத்தேர்வு மாலை 04.00 மணியுடன் நிறைவு பெறுகிறது என கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.ஏ.அனஸ் தெரிவித்தார்.

மொத்தமாக 504 பட்டதாரிகள் வேலையில்லா பட்டதாரிகளாக பதிவு செய்து நேர் முகப் பரீட்சைக்கு தோற்றியுள்ளதாகவும் கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.ஏ.அனஸ் மேலும் தெரிவித்தார்.நேர்முகப் பரீட்சைக்கான சகல ஆவணங்கள் மற்றும் தகவல்கள் அடங்கிய விபரங்கள் யாவும் திருகோணமலை மாவட்ட செயலக அரசாங்க அதிபருக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது குறித்த தினங்களில் கிண்ணியா பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள குறித்த தினங்களுக்குள் வேலையில்லா பட்டதாரிகள் நேர்முகப்பரீட்சைக்கு ஆர்வத்துடன் சமூகமளித்திருந்தனர் எனவும் பிரதேச செயலாளர் இதன்போது தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -