ஹொரவ்பொத்தானை முகம்மது யாசீன் முகம்மது அர்சாத் சாதனை



அப்துல்சலாம் யாசீம்-

ஹொரவ்பொத்தானை பதியூதீன் மஹ்மூத் மஹா வித்தியாலய மாணவன் முகம்மது யாசீன் முகம்மது அர்சாத் 41 வருடத்திற்கு பின்னர் கலைப்பிரிவில் மூன்று ஏ யைப்பெற்று சாதனை படைத்துள்ளார்.

கெப்பித்திகொள்ளாவ கல்வி வலயத்திற்குற்பட்ட ஜந்து தமிழ் மொழி மூல பாடசாலைகளில் ஒன்றான இப்பாடசாலை 1977 02 28ம் திகதி ஆரம்பிக்கப்பட்டதுடன் இப்பாடசாலையின் கல்வி வளர்ச்சி மிகவும் பின் தங்கிய நிலையில் காணப்பட்ட நிலையில் புதிதாக நியமிக்கப்பட்ட இப்பாடசாலையின் அதிபர் எஸ். ஏ.அப்துல்சத்தார் தனது காலப்பகுதிக்குள் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த என்ற நோக்கில் செயற்பட்டதை அவதானிக்க முடிந்ததாகவும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

2017ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற க.பொ.த உயர்தரப்பரீட்சையில் 39 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் 33 மாணவர்கள் சித்தியடைந்த முதல் தடவையெனவும் இப்பாடசாலையில் பல்கழைகழகத்திற்கும் கல்வியல் கல்லூரிக்கும் மாணவர்கள் அதிகளவில் செல்லவிருப்பது முதல் தடவையாகும் எனவும் தெரியவருகின்றது.

குறித்த மாணவன் தனது கல்வியைத்தொடர கரடிக்குளம் பகுதியிலிருந்து ஹொரவ்பொத்தானை நகரை நோக்கி
எட்டு கிலோ மீட்டர் துவிச்சக்கர வண்டியில் வருகை தந்ததுடன் தந்தை பள்ளி வாசலில் முஅத்தினாக கடமையாற்றி வருபவர் எனவும் தெரியவருகின்றது.

வறுமை கோட்டில் வாழ்ந்து வரும் இம்மாணவன் வறுமையை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு கல்வியின் மூலம் வறுமையை போக்க முடியுமென நினைத்து தனது கல்வியை தொடர்ந்ததாகவும் தனது வாழ்க்கையில் கல்வியை தொடர பெரிதும் கஸ்டப்பட்டதாகவும் விடா முயற்சியை தனது வெற்றிக்கு காரணமெனவும் கலைப்பிரிவில் 3 ஏ பெற்ற முகம்மது அர்சாத் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -