அக்கரைப்பற்று :07 விளையாட்டுக்கழகங்கள் கூட்டமைப்பினை ஆதரிக்கத் தீர்மானம்

றிசாத் ஏ காதர் 

அக்கரைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட ஏழு(07) விளையாட்டுக்கழகங்கள் ஐக்கிய சமாதான கூட்டமைப்பினை ஆதரிக்கத் தீர்மானம்.

அக்கரைப்பற்று பிரதேச சபைத் தேர்தலில்; ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் மயில் சின்னத்தின் போட்டியிடும வேட்பாளர்களை ஆதரிப்பதாக பட்டியடிப்பிட்டி, அக்கரைப்பற்று பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் விளையாட்டுக்கழகங்கள் ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பான கூட்டம் 2018.01.17ஆந் திகதி (புதன்கிழமை) பட்டியப்பிட்டியில் அமைந்துள்ள பாலத்தடி மரச்சோலையில் இடம்பெற்றது.

குறித்த தீர்மானமானது, இந்த சமூகத்திற்கான விடிவுக்கு ஆதரவாக அமையப்பெறுவதுடன் முஸ்லிம் சமூகத்தின் விடிவும், மிக நீண்டகாலமாக தீர்க்கப்படாமலுள்ள பிரச்சினைகளை ஐக்கிய சமாதான கூட்டமைப்பு என்ற இந்த அரசியல் கூட்டமைப்பினாலே தீர்க்க முடியும் என்கிற அதீத நம்பிக்கை இங்குள்ள கழகங்களுக்குள் வேரூன்றியுள்ளது. அதுமாத்திரமன்றி கட்சி நலன்களுக்கு அப்பால் சமூகத்தின் பணிக்கு தன்னை அர்ப்பணிக்க திடமாக முடிவெடுத்த அமைச்சர் றிசாட் பதியுத்தீன் மீதும் அதீத நம்பிக்கை இம்மக்களுக்கு ஏற்பட்டதன் பிரதிபலிப்பே இந்த முடிவு செழித்தோங்க காரணமாய் அமைந்துள்ளது என கலந்துகொண்ட கழகங்களின் முக்கியஸ்தர்கள் தெரிவித்திருந்தனர். 

அது மாத்திரமன்றி, விளையாட்டுக்கழகங்களின் எதிர்கால அபிவிருத்தியில் மிக்க கவனத்துடன் நடந்துகொள்வதாக அமைச்சரினால் வழங்கப்பட்ட வாக்குறுதிதியும் இங்குள்ள இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

மேற்படி கூட்ட நிகழ்வில் அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், தூய முஸ்லிம் காங்கிரஸின் பிரதானியுமான அஷ்ஷேஹ் ஹனீபா மதனி கலந்துகொண்டு மேற்படி தீர்மானத்துக்கு நன்றி தெரிவத்ததுடன், காலப் பொருத்தமான ஒரு முடிவினை இந்த பிரதேசத்திலுள்ள கழகங்கள் மேற்கொண்டுள்ளதை தான் வரவேற்பதாகவும் குறிப்பிட்டார். 

மேற்படி தீர்மானங்களை பட்டியடிப்பிட்டி அபீயா, முஹம்மதிய்யா, மற்றும் கோல்டன் ஸ்டார் யூத் ஆகிய கழங்களும் அக்கரைப்பற்று யங் ஸ்டார் யூத்ஸ், லோட்ஸ் போய்ஸ் மற்றும் கிரேன்ட் மொஸ்க் யூத், மூர்ஸ் கழகம் உட்பட ஏழு கழகங்கள் இதில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -