கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் கல்முனை பிரதேச செயலக கலாச்சாரப் பிரிவு நடாத்தும் பிரதேச இலக்கிய விழாவும்,கௌரவிப்பு நிகழ்வும் இன்று(14-12-2017) வியாழக்கிழமை பி.ப.2.00 மணிக்கு மருதமுனை கலாச்சார மத்திய நிலைய மண்டபத்தில் பிரதேச செயலாளர் எம்.எச்.முகம்மட் கனி தலைமையில் நடைபெறவுள்ளது.
இதில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.சி.அன்சார் கலந்து கொள்கின்றார்.கௌரவ அதிதிகளாக உதவிக் கல்விப் பணிப்பாளர் கலாநிதி சத்தார் எம்.பிர்தௌஸ்,கணக்காளர் யு.எல்.ஜவாஹிர், எழுத்தாளர் உமா வரதராஜன்,கவிஞர் சோலைக்கிளி,பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கே.ராஜதுரை ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.
விஷேட அதிதிகளாக மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் டீ.எம். றின்சான், கலாச்சார மேம்பாட்டு உத்தியோகத்தர் ஐ.எல்.எம்.றிஸ்வான்,கிழக்கு மாகாண சிரேஷ்ட கலாச்சார உத்தியோகத்தர் திருமதி வி.பற்பராசா,நிருவாக உத்தியோகத்தர் எம்.ஏ.எம்.எச்.மனாஸ்,சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ்,கிராம சேவை நிருவாக உத்தியோகத்தர் யு.எல்.பதியுதீன் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.
இந்த நிகழ்வில் கலை இலக்கியம்,ஓவியம்,அறிவிப்பு,சமூக சேவை மற்றும் ஊடகத்துறை சார்ந்த 31 பேர்; கௌரவிக்கப்படவுள்ளனர்.
