நாடாளுமன்றத்துடன் தொடர்புடைய பொறியியலாளர் ஒருவருக்கு எதிராக முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சபாநாயகரின் இருக்கையில் அமர்ந்து அவரது இருக்கையை அவமதித்ததாக குறித்த பொறியியலாளருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சக ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கும் போதே குறித்த நபர் சபாநாயகரின் இருக்கையில் அமர்ந்துள்ளார் என கூறப்படுகின்றது.
ஊழியர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக சபாநாயகரின் இருக்கையில் அமர்ந்தமை கண்டிக்கத்தக்க குற்றம், மீண்டும் இவ்வாறான குற்றச் செயல்கள் இடம் பெறக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் முறைப்பாடு ஒன்றை சபாநாயகருக்கு சமர்ப்பித்துள்ளார் என குறித்த கொழும்பு ஊடம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.