ஐ.எஸ்.ஐ.எஸ், தலிபான் உட்பட இயக்கங்கள் மீது 70,000 இஸ்லாமிய மதகுருமார்கள் 'பத்வா' வெளியிட்டனர்.
ஐ.எஸ்.ஐ.எஸ் , தலிபான் , அல்-கொய்தா உட்பட தீவிரவாத இயக்கங்கள் பலவற்றுக்கு எதிராக சுமார் 70,000 இஸ்லாமிய மதகுருமார்கள் 'பத்வா' வெளியிட்டுள்ளனர். மேலும் சுமார் 1.5 மில்லியன் பேர் இதற்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டுள்ளனர்.
மேலும் இஸ்லாமின் பெயரைக் கூறி இவ்வாறான செயல்களை புரிபவர்களுக்கும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இமாம் அஹமட் ரசா கான் குவாத்ரியின் நினைவு நிகழ்வு அனுஷ்ட்டிக்கப்படும் காலப்பகுதியிலேயே இவ்வறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பல உலகநாடுகளில் இருந்து இந்நிகழ்வில் கலந்துகொள்ளும் பல்லாயிரம் இஸ்லாமிய மதகுருக்களே 'பத்வா' ஐ வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை இத்தகைய இயக்கங்களை முஸ்லிம் இயக்கங்களாக அடையாளப்படுத்துவதை தவிர்க்குமாறு மதகுருமார்கள் கோரியுள்ளன.
மேலும் தீவிரவாதிகள் மீதான தாக்குதல் என்ற பெயரில் அமெரிக்க உட்பட நாடுகள் நடத்தும் தாக்குதல்களுக்கும் பொதுமக்கள் கொல்லப்படுவதற்கும் இதன்போது கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.
