றிபாஸ்-
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவமின் அழைப்பை ஏற்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் மற்றும் மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் ஆகியோர் நேற்று 04.11.2015 அக்கரைப்பற்றுக்கு விஜயம் மேற்கொண்டனர்.
இந்நிகழ்வில் அக்கரைப்பற்று பிரதேச சபை, ஃபாயிஸா மகா வித்தியாலயம், அஸ்- சிறாஜ் மகாவித்தியாலயம் அக்கரைப்பற்று சுகாதார வைத்திய பணியகம் போன்றவற்றுக்கு விஜயம் மேற்கொண்டு அங்குள்ள குறைகள், தேவைப்படுகள் போன்றவற்றை கேட்டறிந்து கொண்டனர்.
குறிப்பிட்ட நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் முதலமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சர்களிடம் கேட்டுக் கொண்டமைக்கிணங்க விஜையம் செய்த இடங்களின் தேவைப்பாடுகளை பூர்த்தி செய்து கொடுக்க விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுயளித்தனர்.
இந்நிகழ்வில் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர், சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர், உறுப்பினர் ஏ.எல்.தவம் மற்றும் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எம்.இர்ஷாத் வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.ஹாசிம், அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ஏ.எல்.லத்தீப் அக்கரைப்பற்று மாநக ஆணையாளர் ஏ.அஸ்மி மற்றும் அரச உத்தியோகத்தர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் பொதுமக்கள் என்று பலரும் கலந்து கொண்டனர்.



