மறைந்த தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் சேர் அவர்கபை்பற்றி மருதமுனை கடற்கரையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் நான் வாசித்த கவிதையின் சில வரிகள் ஞாபகத்திற்கு வந்தது
அரசியல்
ஞானியே வா
உன்
வருகையினால்
வரண்டு கிடந்த
எங்கள்
வாழ்க்கை
வசந்தமாகியது
துயரத்தைச் சுமந்த
எங்கள் தோழ்கள்
சுதந்திமாகியது
மரமாக வந்து
நிழல் தந்து
மலராக வந்து
மணம் தந்து
கனியாக வந்து
சுவை தந்து
உரையால்
எமக்கு
உரம்தந்தாய்.
வீரத் தளபதியே
விரூட்ஷமாய்
நீ இரு
விழதுகளாய்
நாம் இருப்போம்
நீ வீழ்ந்து விடாமல் பாதுகாக்க
இந்த வரிகள் மட்டுமே என் ஞாபகத்தில் இருக்கிறது.
- ஊடகவியலாளர் பி.எம்.எம்.ஏ.காதர் மருதமுனை-
