இம்முறை வெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் எம்.என்.சர்பா என்ற மாணவி – 178 புள்ளிகளைப்பெற்று திருகோணமலை மாவட்ட கிண்ணியா கல்வி வலயத்தில் முதலாவது நிலையினைப்பெற்று பாடசாலைக்கும் அவரின் பெற்றோர்களுக்கு பெருமையை தேடிக்கொடுத்துள்ளார்.
திருகோணமலை மாவட்ட கிண்ணியா கல்வி வலையத்தில் சித்தியடைந்த 70 மாணவர்களில் இவர் முதல் நிலையையும், மாவட்டத்தில் 15 வது நிலையையும் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
திருகோணமலை மாவட்ட கிண்ணியா முஸ்லிம் மகளீர் மகா வித்தியாலயத்தில் கல்விகற்கும் இவர் கிண்ணியா தள வைத்தியசாலையில் கடமையாற்றும் மருந்தகவியலாளர் மகாது முஹம்மது நிகார் மற்றும் தாதி உத்தியோகத்தரான உசைன் மர்ஜான் ஆகியோரின் புதல்வியுமாவார்.
