பழுலுல்லாஹ் பர்ஹான்-
சவூதி அரேபியாவின் தேசிய தின வைவபம் நேற்று முன்தினம் கொழும்பு சினமன் லேக் சைட் ஹோட்டலில் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் மஹ்மூத் அலி அலாப் தலைமையில் இடம்பெற்றது.
மேற்படி நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்ட விஞ்ஞான,தொழிநுட்பக்கல்வி மற்றும் தொழில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கேக் வெட்டி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், றிசாட் பதியூதீன்,கபீர் ஹாசிம், அப்துல் ஹலீம்,மற்றும் பிரதியமைச்சர்களான பைஸால் காசிம், எச்.எம்.எம் ஹரீஸ், கிழக்கு மாகாண அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் , இராஜாங்க அமைச்சர் பௌஸியின் இணைப்புச் செயலாளர் புரவலர் ஹாஸிம் உமர். கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம் மாஹிர் இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் அதிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.




