பாலமுனை அல்-அறபா விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் ‘ சாதனையாளர் கௌரவிப்பு விழாவும் கல்வி எழுச்சி மாநாடும்’ நாளை சனிக்கிழமை (26) ஆம் மாலை 4.00 மணிக்கு பாலமுனை கடற்கரை முன்றலில் நடைபெறவுள்ளது.
அல்-அறபா விளையாட்டு கழகத்தின் தலைவர் எஸ்.ஆப்தீன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் இஸட்.ஏ. ஹாபிஸ் நசீர் அஹமட் பிரதம அதிதியாகவும். கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிசாம் கௌரவ அதிதியாகவும். தென்கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி எம்.எம்.எம். நஜீம். பேராதனை பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி எம்.ஐ.எம்.மௌஜ_த். ஆகியோர் விசேட பேச்சாளராகவும் அக்கரைப்பற்று வலயக் கலவிப் பணிப்பாளர் மௌலவி ஏ.எல்.எம்.காசிம். அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா. உட்பட கல்வியலாளர்கள் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் அதிபர்கள் என பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்நிகழ்வின் போது பாலமுனைப் பிரதேசத்திலிருந்து 2008ஆம் ஆண்டு தொடக்கம் 2013ஆம் ஆண்டுவரை பல்கலைக்கழகம் நுழைந்த அனைவரும் பாராட்டி கௌரவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்து.
கல்வி எழுச்சி விழிப்பூட்டல் மாநாடு மூலம் பாலமுனை பிரதேசத்தில் கல்விப் புலத்தில் சாதனை படைத்தவர்கள் பாராட்டிக் கௌரவிக்கப்படுவதன் மூலம் பெற்றோர்களும் மாணவர்களும் உந்தப்பட்டு கல்வி மீதான ஈடுபாட்டை அதிகரித்து இதன் சிறப்பை மேலும் அதிகரிக்கும் நோக்கில் எதிர்காலத்தில் உத்வேகத்துடன் செயற்பட வேண்டுமென்ற நோக்கிலேயே இந்நிகழ்வு பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்து நடத்தப்படுவதாக இந்நிகழ்வில் இணைப்பாளரும் பிரதிக் கல்விப் பணிப்பாளருமான ஏ.ஜி.. பஸ்மில் தெரிவித்தார்.
