ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30வது அமர்வில் இலங்கை தொடர்பான பிரேரணை

U.S. DEPARTMENT OF STATE
______________________________________________________________________________
For Immediate Release

இராஜாங்கச் செயலாளரின் அறிக்கை
செப்ரம்பர் 24, 2015
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30வது அமர்வில் இலங்கை தொடர்பான பிரேரணை
உண்மை, நீதி மற்றும் பரிகாரத்திற்கான முக்கியத்துவத்தின் பகிரப்பட்ட அங்கீகாரத்தின் மைல்கல்லை பிரதிநிதித்துவம் செய்யும், நல்லிணக்கத்தை முன்னிறுத்தல் மற்றும் அனைத்து இலங்கையர்களுக்கும் நீடித்த சமாதானம் மற்றும் அபிவிருத்தியை உறுதி செய்வதில் மீள நிகழாதிருப்பதற்கான உத்தரவாதத்தை வழங்கும்
பிரேரணை ஒன்றை அமெரிக்காவும், இலங்கையும், எமது பங்காளர்களும் ஜெனீவாவில் அமைந்துள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இன்று சமர்ப்பித்தோம்.

இணை அனுசரணையாளர்களாக இணைந்து கொள்வதற்கான இலங்கை அரசாங்கத்தின் தீர்மானமானது, பிரேரணையில் குறிப்பிடப்பட்ட உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கான வழியை ஏற்படுத்துகின்றது.

இலங்கையை சமாதானப் பாதையில் இட்டுச் செல்வதற்காக கடந்த வருடத்தில் இலங்கை மக்கள் இரு முறை வாக்களித்துள்ளதுடன், இலங்கையை நீண்ட காலம் வலுவிழக்கச் செய்து கொண்டிருந்த பிளவுபடுத்தல் அணுகுமுறையிலிருந்தும் நாட்டினை மாற்றியுள்ளனர். 

ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கும், அனைத்து இலங்கையர்களதும் சிவில் சுதந்திரத்தை மீட்டெடுப்பதற்கும் உற்சாகமிகு நடவடிக்கைகளை எடுத்து வரும் இலங்கைக்கான எமது ஆதரவை இந்தப் பிரேரணையானது வெளிப்படுத்துவதுடன், மீள நிகழாதிருப்பதனை உறுதி செய்வதற்கு கடந்த காலத்தின் வலிமிகு அனுபவங்களையும் அடையாளப்படுத்துகின்றது.

இலங்கையர்களுக்கு உரித்தான மற்றும் சர்வதேச சமூகத்தின் ஆதரவு மற்றும் ஈடுபாட்டுடனான நம்பகமான இடைக்கால நீதிச் செயற்பாட்டின் ஊடான முக்கியமான படிநிலையை இந்த பிரேரணை குறிக்கின்றது. காணாமல் போனவர்களின் குடும்பங்கள் தமது அன்புக்குரியவர்கள் குறித்த பதில்களை அறிந்து கொள்வதற்கு இந்தப் பிரேரணை உதவும். உண்மை, நீதி, பரிகாரத்தை வழங்குவதற்கான வழிகளை குறிப்பதுடன், கௌரவம் மற்றும் தொழிற்றுறை நிபுணத்துவத்துடன் நடந்துகொண்ட, இராணுவத்தில் உள்ளவர்கள் உள்ளடங்கலாக, அனைவரினதும் நற்பெயரை பாதுகாக்கும் அதேவேளை, இலங்கை மக்கள் தகுதியுடைத்தாயிருக்கும் மீளநிகழாதிருப்பதற்கான உத்தரவாதத்தையும் அளிக்கின்றது.

இந்த வருடத்தின் முற்பகுதியில் கொழும்பில் வைத்து நான் உறுதியளித்ததைப் போல, இந்த முக்கியமான, ஆனால் சவால் நிறைந்த படிநிலைகளை முன்னெடுக்கும் இலங்கையுடன் இணைந்து செல்லும் எமது உறுதிப்பாட்டில் அமெரிக்கா தொடர்ந்தும் திடமாக இருக்கும்.
                                                            # # #
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -