இந்தியாவில் ஆரம்பமாகியுள்ள இலங்கை இந்திய இளைஞர் பரிமாற்ற மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நிந்தவூர் நெஸ்கோ இளைஞர் கழகத்தின் செயலாளரும், இம்போட்மிரர் இணையத்தளம் மற்றும் சர்வதேசமெங்கும் ஒலிக்கும் சிகரம் வானொலியின் அறிவிப்பாளருமான சுலைமான் நாசிரூன் நேற்று (12) இந்தியா பயணமானார்.
இலங்கையில் தெரிவு செய்யப்பட்ட 17 இளைஞர் யுவதிகளில் கிழக்கு மாகாணத்தைப் பிரதி நிதித்துவப்படுத்தி சுலைமான் நாசிரூன் மற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த தனுசியா ஆகியோர்கள் இந்தியாவில் இடம்பெறும் இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பயணமாகியுள்ளனர்.
இலங்கை இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் இந்தியாவை சார்ந்த "Audacious Dreams Foundation" ஆகியவற்றால் இணைந்து ஆரம்பிக்கப்படவுள்ள இம்மாநாட்டில் இந்தியாவின் கல்விமுறை, அரசியல், இளைஞர் நலம், கலாசாரம், பண்பாடு, மற்றும் வரலாறு போன்றவற்றை இவ்விளைஞர் குழு ஆய்வூ செய்யவுள்ளது.
இதேவேளை இம்மாநாடு எதிர்வரும் 20.08.2015 திகதி வரை இடம்பெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

