முஸ்லீம்களின் நலன் குறித்து பேசுகின்ற எவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசை புறந்தள்ளி வைத்து விட்டு பேச முடியாது. அவ்வாறான சிந்தனையானது அவர்களின் அரசியல் புரிந்துணர்வின் இயலாமையாகவே காண்கிறேன். என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய இளைஞர் அமைப்பாளர் அன்வர் நௌசாத் தெரிவித்தார்.
கிழக்கிலும் தேசியத் தலைவர் ரிஷாத் அவர்களை மக்கள் தமது தலைமையாகவே நினைக்கின்றனர். அம்பாறையில்நேற்று இடம்பெற்ற வரவேற்புக்கள் இதற்கு நல்ல உதாரணமாகும். கடந்த காலங்களில் மாற்றுத்தெரிவு இன்றி இருந்த அம்பாறை முஸ்லீம் அரசியலில் நல்ல செயற்பாடுகளுக்கான ஒரு களமாகவே மக்கள் அ.இ.ம.க தெரிவு செய்துள்ளனர்.
அதேவேளை வேட்பாளர்களாக அ.இ.ம.க களமிறக்கியுள்ள அனைவரும் சமூகத்தில் துறை சார் வல்லுனர்களாக இருப்பதுவும், மக்களோடு இணைந்த அரசியல் நோக்கங்களை கொண்டவர்கள் என்பதுவும் வரலாற்றில் மறைக்கவியலா உண்மையாகும்.
தனி நபர் நலன் மற்றும் கிழக்கின் தேவைகளை புரிந்து கொள்ளாமை என்பனவே மக்களின் இந்த மாற்றத்திற்கு காரணமாகும். மட்டக்களப்பிலும் மக்கள் கொள்கை ரீதியிலான மாற்றங்களைக் காட்டுகின்றனர். அவர்களின் உணர்வுகள் மதிக்கப்படாத இடத்தை இம்முறையும் அவர்கள் அங்கீகரிக்கத் தயாரில்லை. மட்டக்களப்பில் ஐ.தே.க வில் போட்டியிடும் மக்கள் காங்கிரஸ் வேட்பாளர் அமைச்சர் அமீர் அலி அவர்களின் மீதான நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் மக்களிடம் அதிகரித்து வருகின்றது, இன ஐக்கியத்தை நோக்காக கொண்டு செயல்படும் செயல்திறனுள்ள அரசியல் தலைமையாகவே மட்டக்களப்பு மக்கள் அவரை ஆகர்சிக்கின்றனர்.
இந்நிலையில் திருமலையிலும் மக்கள் வேட்பாளராகவே அ.இ.ம.க வேட்பாளர் மஹ்ரூப் அவர்கள் மக்களால் மதிக்கப்படுகின்றார். மொத்தத்தில் இம்முறை அ.இ.ம.க இலங்கை முஸ்லீம் அரசியலில் மறுக்கவியாலாத பெரும் பாத்திரமொன்றை வகிக்க தயாராகி வருகிறது.
இந்நிலையில்வட புல மக்கள் தமது நேசமிகு தலைமையை எந்த விதத்திலும் விட்டுக் கொடுக்கத்தய்யரில்லாத நிலை மகிழ்ச்சியளிக்கின்றது. அம்மக்கள் தம்மை அதிர்ஷ்ட்டசாலிகளாகவே உணர்கின்றார்கள். இந்நிலையில் மக்கள் காங்கிரஸின் வெற்றி மக்களின் வெற்றி என்கின்ற எண்ணம் மக்கள் மனங்களில் ஊன்றி எதிர்காலம் சிறக்க வாக்களிக்க வேண்டும் எனவும் வேண்டிக்கொண்டார்.
