15000 கிராமங்களை மேம்படுத்தும் நிகழ்ச்சித்திட்டம் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு போசாக்கு உணவைப் பெற்றுக் கொடுத்தல் தொடர்பான ஆரம்ப விழா இன்று காலை ஏறாவூர் அரபா வித்தியாலயத்தில் ஏறாவூர் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் மற்றும் விஷேட அதிதிகளாக ஏறாவூர் நகரசபை தவிசாளர் எம்.ஐ.தஸ்லீம், விவசாய அமைச்சர் துரைராஜ சிங்கமின் பாரியாரும் வைத்திய அதிகாரியுமான கலையரசி, ஆகியோர் கலந்து கொண்டனர்.
குறிப்பிட்ட இன்றைய நிகழ்வில் 50 கர்பிணித்தாய்மார்களுக்கான போஷாக்குள்ள உணவுகள் அடங்கிய பொதிகள் பிரதம அதிதியால் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)