நாசிறூன்-
நிந்தவூர் பிரதேச இளைஞர் சம்மேளன புதிய நிர்வாக தெரிவு பொதுக்கூட்டம் நிந்தவூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நிந்தவூர் பிரதேச இளைஞர் சேவை அதிகாரி ஜனாப் எம்.எச்.எம். பைசல் அமீன் அவர்களின் தலைமையில் நேற்று (2015.03.29) இடம்பெற்றது . இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட தலைமை இளைஞர் சேவை அதிகாரி திரு மஜீத் அவர்களும் விஷேட அதிதியாக இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் ஊடக மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சருமான சுலைமான் ஷாபி அவர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் சம்மேளனத்தின் புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டதுடன் அதன் தலைவராக மூன்றாவது முறையாகவும் ஆசிரியர் எஸ்.எம். இஸ்மத் ( முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ) தெரிவு செய்யப்பட்டார். இவர் நிந்தவூர் மதீனா விளையாட்டு கழகத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.






