இலங்கைப் பெண் அகதி ஒருவர் தமிழகத்தில் தீக்குளித்து உயிரிழந்துள்ளார். தமிழ்நாடு திருவண்ணாமலை ஓசூர் வந்தவாசி அகதி முகாமில் தங்கியிருந்த பெண் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
30 வயதான பரமேஸ்வரி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்தப் பெண் திருமணம் முடித்து விவாகரத்தானவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. மண்ணெண்ணை ஊற்றி தமக்கு தாமே தீ மூட்டிக்கொண்டு உயிரை மாய்த்துக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளனர். குறித்த பெண் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

0 comments :
Post a Comment