நரேந்திர மோடி பாராக் ஒபாமாவை சந்திக்கின்றார்

ந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது அமெரிக்க பயணத்தின் போது அந்தநாடடின் ஜனாதிபதி பாராக் ஒபாமாவைச் சந்திக்க உள்ளார் என அமெரிக்க அதிகாரிகள் உறுதிசெய்துள்ளனர்.

இந்த சந்திப்பைத் தொடர்ந்து இருநாட்டு உறவுகள் மற்றும் சர்வதேச அரசில் நிலைப்பாடுகள், அதில் இருநாடுகளும் இணைந்து செயற்படுதல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து இரண்டு நாட்கள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2005ஆம் ஆண்டில் மோடி அமெரிக்காவுக்குள் நுழைவதற்குத் தடைவிதிக்கப்பட்ட பின், மோடி மேற்கொள்ளும் முதல் அமெரிக்கப் பயணத்தில், எதிர்வரும் 29-30ஆம் திகதிளில் முதன் முறையாக வெள்ளை மாளிகைக்கு மோடி செல்ல உள்ளார்.

குஜராத்தில் மோடி முதலமைச்சராக இருந்தபோது நிகழ்ந்த மதக் கலவரங்களையடுத்து, 2005ஆம் ஆண்டில் மோதிக்கு அமெரிக்க விசா மறுக்கப்பட்டது.

இந்தியா - அமெரிக்கா இடையிலான வியூக ரீதியிலான ஒத்துழைப்பின் வாக்குறுதிகளை நிறைவேற்ற, மோடியுடன் சேர்ந்து செயல்பட ஒபாமா ஆர்வத்துடன் இருப்பதாக வெள்ளை மாளிகை வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான வழிகள், பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது, இரு நாடுகளுக்கு மட்டுமல்லாமல் உலகிற்கும் நீண்ட காலத்தில் பலனளிக்கும் நடவடிக்கைகள் ஆகிய விவகாரங்கள் அவர்கள் விவாதிப்பார்கள் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவும் அமெரிக்காவும் வேறு சில நாடுகளுடன் இணைந்து செயல்படக் கூடிய ஆஃப்கானிஸ்தான், சிரியா, ஈராக் போன்ற பிராந்திய விவகாரங்கள் குறித்தும் இவர்கள் விவாதிக்கவிருக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :