த.நவோஜ்-
கிழக்கு மாகாண சபையினால் நடாத்தப்பட்ட 'உற்பத்தித்திறன் போட்டி-2013'இல் கல்வித் துறையில் கிழக்கு மாகாணத்திலுள்ள 17 கல்வி வலயங்களுள் கல்குடா கல்வி வலயம் மூன்றாம் இடத்தினைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் நடைபெற்ற உற்பத்தி திறனுக்கான அதிசிறப்பு விருது வழங்கும் நிகழ்வில் மேற்படி விருது கல்குடா கல்வி வலயத்துக்கு வழங்கப்பட்டது.
இவ் விருதைப் பெற்றுக் கொள்வதற்கு உழைத்த வலயக் கல்விப் பணிப்பாளர் செ.ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் அனைத்து உத்தியோகத்தர்களையும் கல்குடா கல்வி வலய சமூகம் மனதார பாராட்டுகின்றது.
.jpg)
0 comments :
Post a Comment