Share on
யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்ற மோதல் நிலையைத் தொடர்ந்து நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டதோடு மாணவி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாணவி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை, வைத்தியசாலைப் பேச்சாளர் ஒருவர் உறுதிப்படுத்தி

னார்.
யாழ். பல்கலைக்ழகத்திற்கு நேற்று அத்துமீறி நுழைந்த இராணுவத்தினர் மாணவர்களது விடுதி எங்கும் பிரவேசித்ததாகவும் இரு மாணவிகளை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியதாகவும் அதனை கண்டித்து இன்று அமைதியான ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டதாகவும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிய தலைவர் பவானந்தன் தெரிவித்தார்.
எனினும் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு ஆயத்தமானபோது பொலிஸாரும் இராணுவத்தினரும் மாணவர்களை கலைக்க முயன்றதாகவும் அதன்போது முறுகல் நிலை ஏற்பட்டதாகவும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிய தலைவர் தெரிவித்தார்.
இதேவேளை சம்பவ இடத்திற்கு சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் பாதுகாப்பு தரப்பினர் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியபின் கைது செய்யப்பட்ட 4 மாணவர்களும் விடுதலை செய்யப்பட்டதாகவும் பவானந்தன் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment