Share on
ஏறாவூர் நகர சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் கே.எல்.அக்கீல் அர்சாத் என்பவர் தனது நகர சபை உறுப்பினர் பதவியை நேற்று(26.11.2012) இராஜினாமா செய்துள்ளதாக ஏறாவூர் நகர சபை செயலாளர் எம்.எச்.எம்.ஹமீம் தெரிவித்தார்.
ஏறாவூர் நகர சபையின் கடந்த மூன்று கூட்டங்களுக்கு சமூகமளிக்காத நிலையிலிருந்த மேற்படி ஏறாவூர் நகர சபை உறுப்பினர்

அக்கீல் அர்சாத் தனது நகர சபை உறப்பினர் பதவியை இராஜினாமாச் செய்வதாக தெரிவித்து இராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதாக செயலாளர் ஹமீம் தெரிவித்தார்.
மேற்படி ஏறாவூர் நகர சபை உறுப்பினர் அக்கீல் அர்சாத் கடந்த ஏறாவூர் நகர சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் போட்டியிட்டு உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
இவரின் ராஜினாமா தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசீர் ஷேகுதாவூதிடம் கேட்டபோது ஏறாவூர் நகர சபைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் புதிய உறுப்பினர் ஒருவரை விரைவில் நியமனம் செய்யுமென தெரிவித்தார்.

0 comments :
Post a Comment